கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு | தினகரன்


கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (11) நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நாளையதினம் இரவு 10.00 மணி முதல் 07 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அச்சபை அறிவித்துள்ளது.

மிரிஹான, எத்துல்கோட்டை, புறக்கோட்டை, நுகேகொடை, நாவல, கங்கொடவில மற்றும் உடஹமுல்ல ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...