சுவிஸ் தூதரக ஊழியர் 4 மணி நேர வாக்குமூலம் | தினகரன்


சுவிஸ் தூதரக ஊழியர் 4 மணி நேர வாக்குமூலம்

இன்று மூன்றாம் நாள் வாக்குமூலம்

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் உள்நாட்டைச் சேர்ந்த ஊழியர் குற்றப் புலனாய்வு பிரிவில் வழங்கிய வாக்குமூலத்தை தொடர்ந்து வெளியேறியுள்ளார்.

மூன்றாவது நாளாகவும் இன்று (10) காலை CIDயில் சமூகமளித்த அவர் சுமார் 4மணிநேரம்வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் உள்நாட்டைச் சேர்ந்த ஊழியர் கானியா பெனிஸ்டர் கடந்த நவம்பர் 25ஆம் திகதி கடத்தப்பட்டதாக தெரிவித்திருந்த நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் அவருக்கு நாளை மறுநாள் (12) வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...