அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 18,288 வாகனங்கள் இறக்குமதி | தினகரன்


அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 18,288 வாகனங்கள் இறக்குமதி

இவ் வருடத்தில் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு ஆகக்கூடுதலாக 18,288 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் வருடத்தில் கடந்த வாரத்திலேயே கூடுதலான கப்பல்கள் வருகை தந்துள்ளதோடு கூடுதலான வாகனங்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 1,458வாகனங்கள் உள்நாட்டு தேவைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதோடு ஏனைய 16,830 வாகனங்களும் ஏனைய நாடுகளுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.  

மீள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதினூடாக துறைமுகம் சுறுசுறுப்பாக செயற்படுவதனை காணக்கூடியதாக உள்ளது.  

இந்த வாகனங்களில் கார்கள், பஸ் வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களும் உள்ளடங்குகின்றன. ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் களஞ்சியப் பகுதி தற்போது வாகனங்களினால் நிரம்பி காணப்படுகின்றது.  

இதற்கிணங்க கடந்த 03ஆம் மற்றும் 04ஆம் திகதிகளில் ஐந்து கப்பல்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதோடு இவற்றிலிருந்து மீள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்காக 14,311 வாகனங்கள் துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளன.  

இந்த கப்பல்கள் இந்திய நாட்டின் மும்பாய் மற்றும் சென்னை பகுதிகளிலிருந்தும் சிங்கப்பூரி லிருந்தும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்    


Add new comment

Or log in with...