நாட்டை விட்டு சென்றுள்ள ஜூட் ஷ்ரமந்தவுக்கு வெளிநாட்டு தடை நீடிப்பு | தினகரன்


நாட்டை விட்டு சென்றுள்ள ஜூட் ஷ்ரமந்தவுக்கு வெளிநாட்டு தடை நீடிப்பு

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவிற்கு உயர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இப்பயணத்தடை எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹா வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் எதிர்வரும் மே 29 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Add new comment

Or log in with...