உப்பாறு படகு கவிழ்வில் காணமல்போனோரின் சடலங்கள் மீட்பு | தினகரன்

உப்பாறு படகு கவிழ்வில் காணமல்போனோரின் சடலங்கள் மீட்பு

உப்பாறு படகு கவிழ்வில் காணமல்போனோரின் சடலங்கள் மீட்பு-2 Body Found-Boat Capsized-2 Rescued-1 Dead-2 Missing-Upparu-Kinniya

சம்பவத்தில் மூவர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் பலி

திருகோணமலை கிண்ணியா உப்பாறு பாலத்துக்கு அருகில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன நபர்களின் சடலங்கள் இன்று (10) கடற்படையினரின் முகாமுக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் கிண்ணியா, மஹ்ரூப் நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஹனீபா காமில் மற்றும் கிண்ணியா, அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதான, மஜீது கான்  முகம்மது  சஹீப் எனவும் தெரியவருகின்றது.

நேற்றுமுன்தினம் (08) ஞாயிற்றுக்கிழமை காலை கடலுக்கு சென்று வீடு திரும்பும் போது மஹாவலி கங்கையினூடாக கடக்க முற்பட்டபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மூவர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று (10) காலை சடலம் கரையொதுங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மீட்கப்பட்ட சடலத்தை விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...