O/L மாணவன் விபத்தில் பலி | தினகரன்


O/L மாணவன் விபத்தில் பலி

வவுனியாவில் இன்று (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா,சிதம்பரபுரம் வன்னிகோட்டம் பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.  

வவுனியாவில் இருந்து சிதம்பரபுரம் நோக்கிச்சென்ற தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிளில் எதிரே பயணித்த இளைஞர்களுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின்போதுமோட்டார்சைக்கிளில் பயணித்த ஆச்சிபுரம் பகுதியைச்சேர்ந்ததற்போது க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவனான  புண்ணியகுமார்பகிரதன் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த  இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(கோவில்குளம் குறூப் நிருபர்– காந்தன் குணா)


Add new comment

Or log in with...