மன்னாரில் 1,448 கி.கி. பீடி இலைகள் மீட்பு | தினகரன்


மன்னாரில் 1,448 கி.கி. பீடி இலைகள் மீட்பு

மன்னார், பேசாலை பகுதியில் 1,448 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று (09) குறித்த பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, மேற்படி பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட பொதிகளை சோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் பீடி இலைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த பீடி இலைகள் 29 பார்சல்களாக பொதி செய்யப்பட்டுக் காணப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படையினரின் ரோந்து நடவடிக்கை காரணமாக சந்தேகநபர்கள் இப்பொதிகளை கைவிட்டுச் சென்றிருக்கலாமென நம்பப்படுவதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகள், மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ். சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...