திருமதி உலக அழகி கரோலின் ஜூரி நாடு திரும்பினார் | தினகரன்


திருமதி உலக அழகி கரோலின் ஜூரி நாடு திரும்பினார்

2020ஆம் ஆண்டின் திருமதி உலக அழகி மகுடத்தை சூடிக்கொண்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி இன்று (10) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

இன்றையதினம் அதிகாலை  2.45 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது அவரது உறவினர்களினாலும், ஏனையோரினாலும் அவருக்கு மிகுந்த வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த06ஆம் திகதி  அமெரிக்காவின் லாஸ்வெகாஸில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின்போது 2020ஆம் ஆண்டின் திருமதி உலக அழகி மகுடத்தை இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி சூடிக்கொண்டுள்ளார்.


Add new comment

Or log in with...