Wednesday, April 24, 2024
Home » சர்வதேச புனித பகவத் கீதா மகோற்சவம்-2024

சர்வதேச புனித பகவத் கீதா மகோற்சவம்-2024

by Gayan Abeykoon
February 23, 2024 1:00 am 0 comment

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு  சர்வதேச கீதா மகோத்ஸவா குருஷேத்ரா மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து சர்வதேச கீதை விழாவை  நடத்தவுள்ளது.நாட்டின் பல்வேறு மத மற்றும் கலாசார அமைப்புகளின் ஆதரவுடன் ஏற்பாடாகியுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் மார்ச் 01,02, 03 ஆம் திகதிகளில் நடைபெறும்.

முதலாம் நாளன்று காலை சிறுவர், சிறுமியருக்கான சிற்பம் செய்தல்,சித்திரம் வரைதல், கோலம் போடுதல், கட்டுரை வரைதல், கீதா ஸ்லோகம் சொல்லுதல் முதலான போட்டிகள் இடம்பெறும்.

மாலை 3.30 மணியளவில் கீதை யாகம் நிகழ்த்தப்படும். கீதை யாகத்தைத் தொடர்ந்து  ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பக்தர்களின் ஒன்றிணைந்த கீதை வழிபாடு இடம்பெறவுள்ளது.தொடர்ந்து கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இரண்டாம் நாள் நிகழ்வில், பகவத் கீதையின் சாரம், அன்றாட வாழ்வில் பகவத் கீதா போதனையின் பயன்பாடு, பகவத்கீதை பற்றிய பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் மதங்களின் ஒப்பீட்டுப் பகுப்பாய்வு முதலான தொனிப் பொருள்களில் கருத்தரங்கு நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. கருத்தரங்கு நிகழ்விலே இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் கல்விப்புலம் சார்ந்த போராளர்கள்  உரைகள் நிகழ்த்துவர்.

மூன்று அமர்வுகளாக நடாத்தப்படவுள்ள இக்கருத்தரங்கு அமர்வுகளுக்கிடையில் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

நினைவு நாள் வைபவம், கீதா யாகத்துடன் ஆரம்பமாகி, இலங்கை மற்றும் ஹரியானா கலாசாரத்தின் இணைவாக மாபெரும் கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

அகில இலங்கை ரீதியாகப் பங்கேற்கும் கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் இங்கு  ஏற்பாடாகியுள்ளன. கீதா யாத்திரையின் போது யானைகளின் அலங்கார அணிவகுப்பு ஊர்வலமும் இடம்பெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT