கினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு | தினகரன்


கினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு

கினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்ற ஒருவர் இறந்துள்ளார் என கினிகதேன பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு குளிக்க சென்று இறந்தவர் பலாங்கொட அங்கரெல்ல பகுதியில் வசிக்கும் 20வயதுடைய இளைஞர் மகேஸ் என்பவராவர். இறந்த நபர் கினிகதேன பிரதேசத்தில் உள்ள அவரது உறவினர் இல்லத்திற்கு வந்திருந்தபோது நண்பர்கள் மூவருடன் எபடின் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற போது வழியில் கற்பாறையில்வழுக்கி விழுந்து இறந்துள்ளதாக கினிகத்தேன பொலிஸார் கூறினர்.

இறந்த இளைஞரின் சடலம் கினிகதேன வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளது. மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(பெருமாள் - மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...