சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளா் ஆனந்த பீரிஸ் கடமையேற்பு | தினகரன்


சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளா் ஆனந்த பீரிஸ் கடமையேற்பு

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 7வது பணிப்பாளா் நாயகமாக ரியா் அட்மிரல் ஆனந்த பீரிஸ் இன்று (09) மொரட்டுவையில் உள்ள சிவில் பாதுகாப்பு படையின் தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆனாந்த பீரிஸ் கடற்படையில் இணைந்து கடந்த 34 வருடங்கள் உயா் பதவியில் சேவையாற்றியவா். கடந்த யுத்த காலத்தின்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் கடற்படையில் பிரதம அதிகாரியாகவும் கடமையாற்றியவா். ஆனாந்தாக் கல்லுாரியின் பழைய மாணவரான ஆனந்த பீரிஸ் வடக்கு கிழக்கு யுத்த காலத்தில் முல்லைத்தீவு யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் உள்ள தமிழ் இளைஞா்-யுவதிகளுக்கு புனா்வாழ்வளித்து 3500 பேரை சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்து அவா்களை அரச சேவையில் ஈடுபடுத்தியுள்ளார். தற்பொழுது அச் சேவையை அவா்கள் திறம்படச் செய்து வருவதாகவும் இதன்போது கூறினார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக காட்டு யானைகளை பாதுகாப்பது மற்றும் மனிதன் – யானைகள்மோதலில்இறப்பைத் தடுக்கும் வகையில்சிவில் பாதுகாப்புப் படையினா் ஊடாக பாதுகாப்பளிப்பதற்கு ஒரு முறையான திட்டமொன்றை வகுத்துள்ளதாகவும் தெரிவித்தார். சிவில் பாதுகாப்புப் படையினா்களை துார இடங்களில் கடமையாற்றுவதை தவிர்த்து அவா்கள் வாழும் பிரதேசத்திலேயே கடமைகளுக்கு அமா்த்துவதற்கும் திட்டம் வகுத்துள்ளதாகவும் புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளா் நாயகம் ஆனந்த பீரிஸ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதேமேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.

(அஸ்ரப் ஏ சமத்)


Add new comment

Or log in with...