உஹன பிரதேசத்தில் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி காட்டு யானை உயிரிழப்பு | தினகரன்


உஹன பிரதேசத்தில் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி காட்டு யானை உயிரிழப்பு

அம்பாறை உஹன பிரதேச செயலாளர் பிரிவில் சமன் பிரிவேனா அருகில் உள்ள பிரதான வீதியில் மின் கம்பம் இடிந்து விழுந்ததால் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த காட்டு யானை நேற்று (8) அதிகாலை மின் கம்பத்தில் மோதி சிக்கியதுடன் மின்சார கம்பம் மின்சார வயர்கள் அருகில் உள்ள யானை வேலிக்கு மேல் விழுந்திருந்தது.

இதனால் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள காட்டு யானைக்கு சுமார் முப்பது வயது எனவும் அதன் உயரம் எட்டு அடி என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் உஹன பகுதியில் அண்மைக் காலங்களாக குறித்த  இடத்திற்கு அடிக்கடி காட்டு யானைகள் வருகை தருவதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

இறந்த காட்டு யானை அதிசக்தி வாய்ந்த மின்கம்பத்துடன் மோதி அதை  உடைத்திருந்ததுடன் இதனால் இலங்கை மின்சார சபையினர் அப்பகுதி மின்சார இணைப்புகளை தற்காலிகமாக துண்டித்து இறந்த யாணையை மீட்க உதவியுள்ளனர்.

இச்சம்பவத்தினால் உஹன பிரதேசம் மின்சாரம் இன்மையினால் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்


Add new comment

Or log in with...