மீண்டும் பழைய விலையில் பாண் | தினகரன்


மீண்டும் பழைய விலையில் பாண்

பாணின் விலை 05 ரூபாவினால் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலை குறைக்கப்பட்டு மீண்டும் பழைய விலைக்கு விற்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அச்சங்கம் அறிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 08 ரூபாவினால் கடந்த 17ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாணின் விலையை நேற்று நள்ளிரவு (21) முதல் 05 ரூபாவினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் எடுத்திருந்த்து.

கோதுமை மாவின் விலை குறைக்கப்படும் என, உரிய நிறுவனங்கள் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...