அரபு நாடுகளுடன் நல்லுறவைப் பேணும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சிந்தனைகளை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பின்பற்றுவார் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர்முஸ்தபா தெரிவித்தார்.அரபு நாடுகளின் தூதுவர்களை பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே
அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.பிரதமரின் இச்சந்திப்புக் குறித்து முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;
புதிய அரசாங்கத்துக்கு அரபு நாடுகளின் தூதுவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.அரசாங்கத்துக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக உள்ள அரபு நாடுகள் நிதியுதவிகளையும் வழங்கவுள்ளன.
பலஸ்தீனத்துடன் நெருங்கிய நட்புறவுகளைக் கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கை முஸ்லிம்களைக் கைவிடப்போவதில்லை.சிங்கள மன்னர் காலத்தில் எமது முஸ்லிம் மூதாதையர்கள் சிறந்த நட்புறவுடன் பழகியதால் இன்றைய முஸ்லிம் சமூகம் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.இலங்கையின் அரசியல் தலைவர்களுடன் முஸ்லிம் தலைவர்கள் ஒத்துழைத்த வரலாறுகள் எமக்குப் பெருமை சேர்க்கின்றன.
இந்தக் கௌரவத்தை சீரழிக்கும் வகையிலான அரசியலை நாம் முன்னெடுக்க கூடாது. "அசத்தியம் அழிந்து விடும் சத்தியம் நிலைக்குமென" முஸ்லிம்களின் வேத நூலான புனித குர்ஆனும் கூறுகிறது.எனவே நாட்டின் அரசியல் நிலைமைகளுடன் ஒன்றித்துச் செல்வதே முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது.சிங்களக் கிராமங்களுக்கு மத்தியில் அந்நியோன்யமாக வாழ்வதற்கு எமது மூதாதையர் நிலங்களையும் அன்பளிப்புச் செய்தனர்.இந்த வரலாற்றுக்கு உதாரணமாக யக்கஸ்முல்ல கிராமத்தைக் குறிப்பிட முடியும்.எனவே ராஜபக்ஷக்கள் தலைமையிலான அரசாங்கம் முஸ்லிம்கள் விடயத்தில் அதிக அக்கறையுடன் செயற்படும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.இந்த நம்பிக்கைக்கு நன்றிக்கடனாக முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
There is 1 Comment
ராஜபக்ஷக்களின் அரசுடன் நல்லுறவை பேணுவதற்கு அரபு நாடுகள் விருப்ப
Add new comment