wOw.lk இன் தொழிற்பாடுகள் Daraz.lk இன் கீழ்

wOw.lk இன் தொழிற்பாடுகள் Daraz.lk இன் கீழ்-Daraz and Dialog sign strategic partnership

December 01 முதல் WoW.lk இலிருந்து Daraz.lk இற்கு

டயலொக் ஆசிஆட்டா குழுமம் மற்றும் டராஸ் ஸ்ரீலங்கா ஆகிய நிறுவனங்கள் டிஜிட்டல் வணிகத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான ஒரு மூலோபாய பங்காளித்துவத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த பங்காளித்துவத்தின் முதற்படியாக, டயலொக் ஆசிஆட்டா குழமத்திற்குச் சொந்தமான இலத்திரனியல் வணிகத் தளமாக காணப்படும் wOw.lk இணையத்தளத்தின் முகாமைத்துவம் மற்றும் வணிக தொழிற்பாடுகளை டராஸ் ஸ்ரீலங்கா ஒருங்கிணைத்து செயற்படும். இந்த ஒருங்கிணைந்த முன்னெடுப்பானது, டராஸ் (Daraz) இலங்கையில் தனது இலத்திரனியல் வணிக நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவியாக அமையும்.

wOw.lk இன் தொழிற்பாடுகள் Daraz.lk இன் கீழ்-Daraz and Dialog sign strategic partnership

2019 டிசம்பர் 1ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், wOw.lk இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கும் வாடிக்கையாளர்கள் Daraz.lk இணையத்தளத்தை நோக்கி மீள் திருப்பப்;படுவர். இதன்மூலம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து செல்லும் இலத்திரனியல் வணிகத் தளமான Daraz.lk ஊடாக அதிகளவிலான பொருட்கள் மற்றும் சேவைகளை அவர்கள் அணுகக் கூடியதாக இருக்கும். எவ்வாறிருப்பினும், தற்போதைய wOw.lk வாடிக்கையாளர்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் வேளையில் அந்த தளத்திலிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவாத கட்டமைப்பை தொடர்ந்தும் அனுபவிப்பார்கள்.

கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக, இலங்கையில் இலத்திரனியல் வணிக தொழிற்பாடுகளை கட்டமைப்பதில் wOw.lk இணையத் தளமானது மிக முக்கியமான ஒரு கருவியாக இடம்பிடித்துள்ளது. இந்நிலையில் இப் புதிய பங்காளித்துவத்தின் மூலம்,  ஒரு பிரத்தியேகமான இலத்திரனியல் வணிகத் தளமாகத் திகழும் டராஸ் இடமிருந்து டயலொக் வாடிக்கையாளர்கள் மேலும் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வார்கள்.

“டயலொக்கின் இலத்திரனியல் வணிக தொழிற்பாட்டுடனான ஒருங்கிணைப்பானது, சந்தையில் டராஸ் தளத்திற்கு உறுதிமிக்கதொரு அந்தஸ்தை வழங்குகின்ற அதேநேரத்தில், எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த ஒன்லைன் பொருட் கொள்வனவு சேவையை வழங்கியவாறு மேலும் துரிதமாக வளர்ச்சியடைவதற்கும் எமக்கு இடமளிக்கின்றது. இலங்கையில் இலத்திரனியல் வணிகத் துறையில் wOw.lk ஒரு முன்னோடி வணிகத் தளமாகக் காணப்படுகின்றது. Daraz.lk ஊடாக அந்த மரபுரிமைப் பண்பை கட்டியெழுப்ப நாம் திட்டமிட்டுள்ளோம்” என்று டராஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ராக்ஹில் பெர்ணான்டோ தெரிவித்தார். 

“டராஸ் இனால் உள்வாங்கப்பட்ட சந்தைமைய மாதிரியானது பொருட் கொள்வனவாளர்கள் மற்றும் விற்பனைப் பங்காளிகள் ஆகிய இரு தரப்பினருக்கும் வெற்றிகரமானதாக அமைந்துள்ளதுடன், அங்குள்ள வர்த்தகக் குறியீடுகளை தெளிவாகக் காணக் கூடியதாகவும் அதேநேரம் பரந்துபட்ட வகைகளிலான பொருட்களிலிருந்து தமக்கு விரும்பியதை கொள்வனவு செய்ய இடமளிப்பதாகவும் காணப்படுகின்றது.  சர்வதேச அளவில் வெற்றிகரமான ஒரு இலத்திரனியல் வணிக முன்னெடுப்பாக திகழும் அலிபாபா (Alibaba) தளத்துடன் டராஸ் (Daraz) ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒன்றிணைவானது, இலங்கையைப் போன்றதொரு வளரும் இலத்திரனியல் வணிக சந்தைக்குள் சரியான நேரத்தில், நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பம் கடத்தப்படுவதை உறுதி செய்வதாக அமைகின்றது. நாட்டில் 3 வருடங்களுக்கும் மேலாக தொழிற்பட்ட Daraz.lkஇ இலத்திரனியல் வணிகச் சந்தையில் சர்வதேச வர்த்தகக் குறியீடுகள் மட்டுமன்றி சிறிய நடுத்தர நிறுவனங்களும் தமது பயணத்தில் பங்கெடுப்பதற்கான ஒரு களத்தை ஏற்படுத்தியுள்ளது. இப் புதிய முன்முயற்சியின் பலனாக மேலும் பல வர்த்தகக் குறியீடுகளை ஒன்றுசேர்க்க முடிவதுடன், அதன்மூலம் Daraz இல் தற்போது கிடைக்கக் கூடியதாகவுள்ள 800,000 இற்கும் அதிகமான உற்பத்தி வகைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

டயலொக் ஆசிஆட்டா பி.எல்.சி. நிறுவனத்தின் பிரதம டிஜிட்டல் சேவைகள் அதிகாரியான கலாநிதி நுஷாட் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை கட்டியெழுப்புவதில் எமது இரு நிறுவனங்களும் உறுதிமிக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றன. அந்தவகையில், கட்டுப்படியான அடிப்படையில்  கிடைக்கக் கூடியதான டிஜிட்டல் வணிக சேவைகளை இலங்கையர்கள் அணுகிப் பயனடைவதை இப் பங்காளித்துவம் மேலும் பலப்படுத்தும்” என்றார். 


Add new comment

Or log in with...