மக்கள் வங்கி, பாடசாலை வங்கி அலகு கண்டி மஹமாயவில் | தினகரன்


மக்கள் வங்கி, பாடசாலை வங்கி அலகு கண்டி மஹமாயவில்

இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் வங்கியில் அனுபவத்தினை வழங்கிடும் நோக்கத்துடன் மக்கள் வங்கி அறிமுகப்படுத்திய NFC தொழில்நுட்பத்துடனான பண வைப்பு இயந்திரம் ஒன்றினை உள்ளடக்கிய பாடசாலை வங்கி அலகொன்று அண்மையில் கண்டி மஹமாயா வித்தியாலத்தில் திறந்து வைக்கப்பட்டது.  

கண்டி மஹமாயா வித்தியாலத்தின் அதிபர் எச் . சேனாதீர, உப அதிபர்கள், மக்கள் வங்கியின் சிரேஷ்ட உப பொதுமுகாமையாளர் (வங்கி நடவடிக்கைகள்) பொனிஃபஸ் சில்வா, கண்டி பிரதேச முகாமையாளர் டீ.எம்.டீ. திசாநாயக்க ஆகியோருடன், உதவி பிரதேச முகாமையாளர்கள், கண்டி கிளை முகாமையாளர் ஜனக ஜயசிங்ஹ உள்ளடங்கலாக வங்கி உத்தியோகத்தர்கள், மஹமாயா வித்தியாலத்தின் ஆசிரியர் குழாம் மற்றும் மாணவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.   இந்த பாடசாலை வங்கி அலகுகளை அமைப்பதன் நோக்கம், பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மிகவும் பாதுகாப்பானதும் இலகுவானதுமான வழியில் தங்களது வங்கி நடவடிக்கைகளை செய்து கொள்வுதற்கு வழிவகுத்துக் கொடுத்து அவர்களில் சேமிப்புப் பழக்கத்தினை மேலும் ஊக்குவிப்பது ஆகும். மாணவர்களினிடையே சேமிப்பு பழக்கத்தினை மேலும் விருத்தியடைய செய்வதன் மூலம் அனைத்து பிள்ளைகளுக்கும் பிரகாசமிக்கதோர் எதிர்காலத்தினை உருவாக்கிக் கொடுப்பது மக்கள் வங்கியின் எதிர்பார்ப்பாகும். இலங்கையில் முதலாவது முறையாக 1971ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தினை உருவாக்கிய மக்கள் வங்கி, இலங்கையில் முதன்முறையாக பண வைப்பு இயந்திரம் ஒன்றை உள்ளடக்கிய பாடசாலை வங்கி அலகினை 2018ஆம் ஆண்டு உலக சிறுவர் தினத்தினையொட்டி கொழும்பு ஆனந்தா கல்லூரியில் திறந்து வைத்தது.  

மக்கள் வங்கியின் பண வைப்பு இயந்திர பாடசாலை வங்கி அலகின் ஊடாக மாணவர்களுக்கு தங்கள் சிசு உதான கணக்குக்கு தங்கள் பணத்தினை தாளாக அல்லது நாணயங்களாக வைப்புச் செய்ய முடியும். கணக்கு மீதியை அறிந்து கொள்ள, வங்கி சீட்டுக்களை நிரப்பாது பண வைப்புச் செய்யக்கூடிய வசதி போன்றன காணப்படுகின்றன.


Add new comment

Or log in with...