Oppo Snapdragon 865, 765G உடன் 5G ஸ்மார்ட்போன் | தினகரன்


Oppo Snapdragon 865, 765G உடன் 5G ஸ்மார்ட்போன்

Oppo Snapdragon 865, 765G உடன் 5G ஸ்மார்ட்போன்-Alen-Wu-OPPO-Vice-President-and-President-of-Global-Sales,-delivers-a-keynote-Speech-at-the-Qualcomm-Snapdragon-Tech-Summit

ஸ்னப்ட்ரகன் 865 ஐ அடிப்படையாகக் கொண்ட OPPO முதன்மை சாதனம் 2020 இன் முதல் காலாண்டில் சந்தைகளை ஆக்கிரமிக்கும்

குவல்கொம் ஸ்னப்ட்ரகன்™ 865 மொபைல் இயங்குதளத்தால் (Qualcomm® Snapdragon™ 865) இயக்கப்படும் Oppo Snapdragon 865, 765G உடனான 5G ஸ்மார்ட்போன்-Alen-Wu-OPPO-Vice-President-and-President-of-Global-Sales,-delivers-a-keynote-Speech-at-the-Qualcomm-Snapdragon-Tech-Summitதங்களது முதன்மை 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனங்களில் ஒன்றாக 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாறும் என Oppo அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 03ஆம் திகதி இடம்பெற்ற வருடாந்த குவல்கொம் ஸ்னப்ட்ரகன் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் OPPO இன்று அறிவித்துள்ளது. குவல்கொம் டெக்னொலஜிஸ் நிறுவனத்தின் (Qualcomm Technologies, Inc.) அடுத்த தலைமுறை ஸ்னப்ட்ரகன் 765G மொபைல் இயங்குதளத்துடனான தனது அனைத்து புதிய Reno 3 Pro மொபைல்போன்களும் இந்த மாதம் அறிமுகம் செய்யப்படும் எனவும் OPPO அறிவித்துள்ளது. 5G ஒருங்கிணைந்த தமது தரக்குறியீட்டின் முதலாவது இரட்டை பயன்முறை 5G (dual-mode 5G) கையடக்க தொலைபேசியாக இது அமையவுள்ளது.

OPPO இன் பிரதித் தலைவரும் உலகளாவிய விற்பனை தலைவருமான அலன் வு (Alen Wu) தெரிவிக்கையில், “ஸ்னப்ட்ரகன் 865 மொபைல் இயங்குதளங்களுடன் எங்கள் சாதனங்களை இயக்குவதன் மூலம், உலகெங்கிலும் உள்ள நுகர்வோருக்கு மேம்பட்ட செயல்திறனுடன் கேமரா, கேமிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற சிறந்த அனுபவங்களைக் கொண்ட பிரீமியம் தரத்திலான முதல்நிலை 5G ஸ்மார்ட்போன்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஸ்னப்ட்ரகன் 765G உடனான Reno 3 Pro மூலம் பயனர்கள் சிறந்த தரத்திலான 5G  தொடர்பு, குவல்கொம் ஸ்னப்ட்ரகன் எலைட் கேமிங் (Qualcomm® Snapdragon Elite Gaming™) அனுபவத்தை பெறவும் அதன் அதி-மெல்லிய உருவாக்க காரணியில் சிறந்த செயல்திறனை அனுபவிக்கவும் ஒருங்கிசைகிறது. எதிர்காலத்தில் மேலும் பல 5G தயாரிப்புகளை வெளியிட OPPO திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உலகெங்கிலும் 5G தொழில்நுட்பத்திற்கு பெரிய அளவில் இசைவாக்கத்திற்கு இட்டுச் செல்ல வழிவகுக்கிறது”என்று கூறினார்.

புரட்சி மிக்க ஸ்னப்ட்ரகன் 5G மொபைல் இயங்குதளங்கள் OPPO அதன் முதன்மை ஸ்மார்ட்போன்களை சிறந்த தரத்திலான செல்லிட இணைப்பு, செயல்திறன், மின்கல ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டு செயல்பட உதவுகின்ற அதே நேரத்தில், அதன் சாதனங்களின் அதிநவீன உருவாக்கல் காரணி வடிவமைப்புக்கு ஆதரவளிக்கிறது. அத்துடன் பயனர்களுக்கு அடுத்த தலைமுறை உயர்தர வீடியோ, புகைப்படம், கேமிங் அனுபவங்களை வழங்குகிறது. ஒருங்கிணைந்த 5G உடன் ஸ்னப்ட்ரகன் 765G மொபைல் இயங்குதளத்தால் இயக்கப்படுவதோடு, 7 நனோமீற்றர் செயற்பாட்டு தொழில்நுட்பத்தினால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், வரவிருக்கும் Reno 3 Pro ஆனது, எதிர்பார்க்கப்படுவதை விட அதிகமான 5G அனுபவத்தை நுகர்வோருக்கு வழங்குவதாக இருக்கும்.

OPPO எப்போதும் 5G ஸ்மார்ட்போன்களின் முன்னோடியாகவும் அதனை ஊக்குவிக்கவும் உறுதியளித்துள்ளது. மே மாதத்தில், அது தனது தரக்குறியீட்டுடனான உத்தியோகபூர்வ Reno 5G இனை சுவிட்சர்லாந்தில் அறிமுகப்படுத்தியதன் மூலம், அத்தொலைபேசி ஐரோப்பாவில் தனது முதலாவது வர்த்தக ரீதியான 5G தொலைபேசியாக அமைந்துள்ளது. பரவலாக பாராட்டப்பட்ட அந்த ஸ்மார்ட்போன் ஆனது முறையே அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், இத்தாலி ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டது. Reno 5G, Oppo, குவல்கொம் டெக்னொலஜிஸ் மற்றும் எரிக்சன் ஆகியவற்றிற்கு, கடந்த ஜூன் மாதத்தில் “ஐரோப்பாவில் சிறந்த 5G வலையமைப்பு மேம்பாடு” எனும் விருது கூட்டாக வழங்கி வைக்கப்பட்டது.

Oppo Snapdragon 865, 765G உடனான 5G ஸ்மார்ட்போன்-Alen-Wu-OPPO-Vice-President-and-President-of-Global-Sales,-delivers-a-keynote-Speech-at-the-Qualcomm-Snapdragon-Tech-Summit

குவல்கொம் டெக்னொலஜிஸ் உடனான நீண்டகால ஒத்துழைப்பை OPPO மதிப்பளிக்கிறது. OPPO 2018 ஆம் ஆண்டில், ஸ்னப்ட்ரகன் 845 ஐ இணைக்கப்பட்ட முதன்நிலை கையடக்க தொலைபேசியான அதன் Find X ஐ அறிமுகப்படுத்தியது. இந்த சாதனம் ஐரோப்பிய சந்தையில் OPPO இற்கு ஒரு பெரிய வெற்றியை ஈட்டித் தந்தது. புரட்சிகரமான வடிவமைப்பு, புதுமைமிகு பொழுதுபோக்கு, இணைப்பு ஆற்றல் ஆகியவற்றின் மூலம் நுகர்வோருக்கு மாறுபட்ட புதுமையான அனுபவங்களை அது வழங்குகிறது. 2019 ஆம் ஆண்டில், ஸ்னப்ட்ரகன் 855, ஹைப்ரிட் சூம் வசதிகளுடனான ஸ்மார்ட்போனான Reno 10, 10x மற்றும் ஸ்னப்ட்ரகன் 855 Plus இனால் இயங்கும் Reno Ace ஆகியவற்றை OPPO வெளியிட்டது. இவை இரண்டும் முறையே, சிறந்த புகைப்படம் மற்றும் கேமிங் செயல்திறன் காரணமாக நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

5G மற்றும் புத்திசாலித்தனமான இணைப்பு உலகில், 5G தொழில்நுட்பம், தயாரிப்பு ஆராய்ச்சி, செயலிகளின் தேவைகள் தொடர்பில் OPPO தொடர்ந்தும் முதலீடு செய்யும். குவல்கொம் டெக்னொலஜிஸ் மற்றும் இத்தொழில்துறையின் ஏனைய பங்காளர்களுடன் கைகோர்த்து, உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கு மேலும் 5G மூலமான பெறுமதிகள் மற்றும் சாத்தியங்களை ஆராய்ந்து OPPO தொடர்ந்தும் கொண்டு வரும் என உறுதியளிக்கின்றது.

OPPO பற்றி
வளர்ந்து வரும் உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான OPPO, கடந்த பத்து ஆண்டுகளாக நுகர்வோர் நடத்தை மற்றும் அபிலாஷைகளைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுக்கு ஏற்ப தொழில்நுட்ப முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட புதுமையான தொழில்நுட்பம், நுணுக்கமான வடிவமைப்பு மற்றும் கெமரா நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசாதாரண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொபைல் துறையில் சுழலும் கெமரா, அல்ட்ரா எச்டி அம்சம் மற்றும் 5 x டுவல் கெமரா Zoom தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை,  மொபைல் துறையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பல ஸ்மார்ட் கண்டுபிடிப்புகளில் அறிமுகப்படுத்திய முதல் வர்த்தக நாமம் OPPO ஆகும்.
2016 ஆம் ஆண்டில் செல்பி-மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, OPPO புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் நுண்ணறிவு பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. அதன் பல மாதிரிகள் மற்றும் வரம்புகள் மூலம் ஏராளமான வடிவமைப்புகள் மூலம் நுகர்வோர் அனைவரையும் அவர்களிடம் உருவாகி வரும் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது.
200 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர் OPPO ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர், OPPO இன் வர்த்தகம் 35 நாடுகளையும் பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாகும். 400,000 இற்கும் மேற்பட்ட காட்சியறைகளைக் கொண்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் 4 ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது. அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் புகைப்பட அனுபவத்தை வழங்கி வருகிறது.


Add new comment

Or log in with...