அம்பாறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு | தினகரன்


அம்பாறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு முதற்கட்டமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 10ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் தெரிவித்தார்.  

ஆலையடிவேம்பு, திருக்கோவில், உகன, காரைதீவு, லகுகல, கல்முனை வடக்கு, சம்மாந்துறை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் 12ஆயிரத்து 461குடும்பங்களைச் சேர்ந்த 40ஆயிரத்து 410நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளதாகவும், 112வீடுகள் பகுதியளவிலும், 02வீடுகள் முழுமையாகவும், பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்தார். வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவு என்பன வழங்கப்பட்டு வருவதாகவும், கூறினார்.  

பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளில் தொடர்ந்தும் தங்கிவருவதாகவும், இவர்களுக்கான உலர் உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், கூறினார்.  

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தத்தமது வீடுகளை புனரமைப்புச் செய்வதற்கு முதற்கட்டமாக, 10 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும், முழுமையான பாதிப்புகள் தொடர்பாக மதிப்பீட்டு அறிக்கை கிடைக்கப்பெற்றதும் முழுமையான நஷ்டஈடு வழங்கப்படுமெனவும், மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் மேலும் தெரிவித்தார். 

ஒலுவில் விசேட நிருபர் 


Add new comment

Or log in with...