Thursday, March 28, 2024
Home » இந்திய உயர்ஸ்தானிகருடன் அமைச்சர் டக்ளஸ் அவசர பேச்சு
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை

இந்திய உயர்ஸ்தானிகருடன் அமைச்சர் டக்ளஸ் அவசர பேச்சு

by damith
February 26, 2024 8:00 am 0 comment

இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படும் இச்சந்தர்ப்பத்தில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையே நேற்று மாலை விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இச்தசந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக மீனவர்களின் அத்துமீறல் நடவடிக்ைகயால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதுடன் கடல் வளமும் அழிக்கப்படுவது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உயர் ஸ்தானிகரிடம் தெளிவுபட எடுத்துரைத்தார்.

மீனவர்கள் பிரச்சினையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆக்கபூர்வமான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொண்டதுடன் இருதரப்பிலும் உள்ள மீனவர்களின் நலனுக்காக மனிதாபிமான முறையில் இது தீர்க்கப்பட வேண்டுமென உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT