கம்பியாவிலிருந்து ஐரோப்பாவுக்குள் குடிபெயர வந்த படகு கவிழந்து 58 பேர் பலி | தினகரன்


கம்பியாவிலிருந்து ஐரோப்பாவுக்குள் குடிபெயர வந்த படகு கவிழந்து 58 பேர் பலி

gambia europe boat capsized

ஐரோப்பாவுக்குள் குடிபெயரும் நோக்கில் பயணிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 58 பேர் உயிரிழந்தனர்.

மேலும் தத்தளித்துக் கொண்டிருந்த 83 பேர் பாதுகாப்பாக நீந்தி கரையேறியதாக சர்வதேச புலம்பெயர் அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.சிறுவவர்கள்,பெண்கள் உட்பட 150 பேரை ஏற்றி வந்த இந்தப்படகு ஐரோப்போவுக்குள் நுழையும் பொருட்டு ஆபிரிக்க நாடான கம்பியாவிலிருந்து புறப்பட்டுள்ளது. நவம்பர் 27 இல் புறப்பட்ட இப்படகு நேற்று (05) வியாழக்கிழமை கவிழ்ந்தது. குறைந்தளவு எரிபொருள் இருந்த நிலையில் ஆபிரிக்காவின் வடமேற்கு கரையை நெருங்கிய நிலையிலே இப்படகு கவிழ்ந்துள்ளது.

நீந்திக் கரையேந்து காயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.கடலில் மூழ்கித் தத்தளிப்போரைக் காப்பாற்றுவதற்கான வசதிகள், திருப்திகரமான நிலையில் இல்லையென மொரிட்டானியா கரையோரப்பாதுகாப்புச் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு கடல்மார்க்கமாகச் செல்லும் பாதை மிக ஆபத்தானதாகும்.இந்நிலையிலும் இம்மக்கள் ஐரோப்பாவுக்கு குடிபெயரும் நோக்கில் இந்த ஆபத்தான பாதையையே பயன்படுத்துகின்றனர்.

இந்த ஆண்டில் மாத்திரம் இவ்வாறான ஆபத்தான கடற்பயணங்களால் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கம்பியாவிலிருந்து அதிகளவான மக்கள் ஐரோப்பாவுக்கு குடியெர விரும்புகின்றனர்.2014 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரைக்கும் கம்பியாவிலுருந்து 35,000 பேர்

ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளனர்.எனினும் இதற்கான காரணத்தை அந்நாட்டு அரசு இதுவரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை. குறைந்த இயல்தகவுடைய படகுகளில் பயணிப்பது,அளவுக்கதிகமானோரை ஏற்றிச் செல்வது,கடல்பயணங்கள், வழிகள் குறித்த தௌிவின்மைகளாலே இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுகின்றன.


Add new comment

Or log in with...