Airtel இற்கு 5MHz அலைவரிசை ஒதுக்கீடு | தினகரன்


Airtel இற்கு 5MHz அலைவரிசை ஒதுக்கீடு

இலங்கையில் இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபல்யமடைந்துள்ள டெல்கோ இலச்சினைகளில் ஒன்றான பாரதி ஏர்டெல் லங்கா (“Airtel Lanka”), இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடமிருந்து (TRCSL) 900மெகா ஹெர்ட்ஸ் (MHz) அலை அதிர்வெண்ணிலிருந்து 5மெகா ஹெர்ட்ஸ் (MHz) ஒதுக்கீட்டைப்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. 

இந்த ஒதுக்கீடானது “நிர்வாக அடிப்படையில்” மேற்கொள்ளப்பட்டதோடு, முன்வெளியிடப்பட்ட அளவுகோலின் அடிப்படையில் அமைந்தது. இந்த அளவுகோலின் நோக்கமானது தொலைத்தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நான்கு நிறுவனங்களுக்கும் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு குறித்த அலை அதிர்வெண்களை சமமாக வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிட்டுவதேயாகும். அதனூடாக விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் போது ஏற்றத்தாழ்வுகளை குறைத்துக் கொள்வதற்காக குறித்த அலை அதிர்வெண்கள் சமமாக வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு குறுக்கீடுகள் இல்லாமல் அதிர்வெண்ணை உறுதிப்படுத்தக் கூடியதாக அமையும் என அதன் தேர்வாளர்கள்  தெரிவிக்கின்றனர்.

இந்த அதிர்வெண் ஊடாக விரிவான தொலைத்தொடர்பு சமிஞ்ஞை (Coverage) வசதிகள் கிடைப்பதோடு ஏர்டெல் பாவனையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட குரல் மற்றும் டேட்டா அனுபவத்தை அளிக்கிறது. இது ஏர்டெல்லின் துணிச்சல்மிக்க மூலோபாயத்தின் முதல்படியாகும், இது ஒருவராலும் தாண்டமுடியாத பாவனையாளர் அனுபவத்தை வழங்குவதற்காக தற்போதைய அளவீட்டை நோக்காகக் கொண்டுள்ளது.  2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது.


Add new comment

Or log in with...