தேசிய தௌஹீத் ஜமாஅத் தொடர்புடையோரின் வி.மறியல் நீடிப்பு | தினகரன்


தேசிய தௌஹீத் ஜமாஅத் தொடர்புடையோரின் வி.மறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 63பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹீத்  ஜமாத் தலைமையகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 

நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் டிசம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். 

மட்டக்களப்பு குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...