பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கு; லண்டன் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் | தினகரன்


பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கு; லண்டன் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்

பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கு; லண்டன் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்-Protest-Near-Westminster-Magistrate-Brigadier-Priyanka-Fernando

ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தி சைகை

இலங்கையின் ராஜதந்திரியும் இங்கிலாந்துக்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு தொடர்பான அதிமான பிரிகேடியர் பிரியங்க பெனாண்டோவுக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றுக்கு முன்பாக குறித்த ஆர்ப்ப்பாட்டம் இன்று (18) இடம்பெற்றது.

குறித்த வழக்கு வெஸ்மினிஸ்டர் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட நிலையிலேயே இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த ஆண்டு இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 04 ஆம் திகதி லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், அதற்கு எதிரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறி கோரி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டகார்களை நோக்கி 'கழுத்து அறுப்பது போன்ற" சைகை காட்டி அச்சுறுத்தியதாக பிரிகேடியர் பிரியங்க பெனாண்டோவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய நீதி துறையில் அரசியல் தலையீட்டை தவிர்ப்போம் எனவும், குறித்த இராணுவ அதிகாரிக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், புலம்பெயர் தமிழ் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரிகேடியர் பிரியங்க பெனாண்டோ, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெரும்பாலான முன்முனை தாக்குதல்களை மேற்கொண்ட, இலங்கை இராணுவத்தின் 59 அவது பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தர்ப்பத்தில் இராணுவ உடை அணிந்திருந்த அவர், ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி, அவர்களை அச்சுறுத்தும் வகையில் மூன்று முறை இவ்வாறு சைகை செய்திருந்ததோடு, குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவியது.

அத்துடன் இது தொடர்பில் லண்டனிலுள்ள பொலிஸில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பதோடு, பின்னர் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்த்கது. (RSM)

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்) 


Add new comment

Or log in with...