கஞ்சிப்பானை இம்ரானுக்கு 6 வருட சிறைத்தண்டனை | தினகரன்


கஞ்சிப்பானை இம்ரானுக்கு 6 வருட சிறைத்தண்டனை

பாதாளக் குழுவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கஞ்சிப்பானை இம்ரான் என்று அழைக்கப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட்டிற்கு, கொழும்பு உயர் நீதிமன்றம் 06 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (23) உயர் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டபோது,  நீதிபதி கிஹான் குலதுங்க இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்.  

கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 18 ஆம் திகதி மாளிகாவத்தையில் 05 கிலோ 300 கிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்தமை மற்றும்  வர்த்தகத்தில்  ஈடுபட்டமை தொடர்பாக கஞ்சிப்பானை இம்ரானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

இதற்கமைய, தனது கட்சிக்காரர் அக்குற்றங்களை ஏற்றுக்கொள்வதாக அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணி லக்‌ஷ்மன் பெரேரா தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் தலா ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 3 வருடங்கள் வீதம் 06 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை வழங்க கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Add new comment

Or log in with...