தமிழகத்தில் இன்றும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு | தினகரன்


தமிழகத்தில் இன்றும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

தென் தமிழக கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் தென் தமிழக கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று பலத்த மழை பெய்தது. ​இ​ன்றும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறும்போது, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் வருகிற 7,8-ந்தேதிகளில் கிழக்கு திசை நோக்கி காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


Add new comment

Or log in with...