Friday, March 29, 2024
Home » நாட்டின் பொருளாதார மீட்புக்கு வாழைச்சேனை காகிதஆலை பயன்படுத்தப்படுவது அவசியம்

நாட்டின் பொருளாதார மீட்புக்கு வாழைச்சேனை காகிதஆலை பயன்படுத்தப்படுவது அவசியம்

by damith
February 26, 2024 6:00 am 0 comment

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வாழைச்சேனை என்றதும் அங்கு அமைந்துள்ள கடதாசித் தொழிற்சாலைதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். 1990 களில் இத்தொழிற்சாலை மூடப்பட்டது.

1947 இல் ஐ.தே.க அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக ஜோர்ஜ் ஈ. டி சில்வா பதவி வகித்தார். அப்பதவி 1948 இல் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1951 இல் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலைக்கு ஜி. ஜி. பொன்னம்பலம் அடிக்கல் நாட்டினார். ஜேர்மன் நாட்டின் உதவித் திட்டத்தின் கீழ் இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

1952 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் ஐ.தே.கவே ஆட்சிக்கு வந்தது. அந்த அரசிலும் ஜி. ஜி. பொன்னம்பலமே கைத்தொழில் அமைச்சரானார். அதனால் அவர் அடிக்கல் நாட்டி ஆரம்பித்த கடதாசித் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் அமரர் டட்லி சேனநாயக்க அவர்களின் ஆட்சியிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.

1953 இல் இடம்பெற்ற ஹர்த்தாலைத் தொடர்ந்து சேர் ஜோன் கொத்தலாவல நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்ற போதிலும் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் அமைச்சுப் பதவி மாற்றமடையவில்லை. அதன் பயனாக அவர் ஆரம்பித்த வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் 1956 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியாகும் போது நிறைவடையும் கட்டத்தை அடைந்தன. நீண்ட காலம் பலர் மேற்கொண்ட அர்ப்பணிப்பு மிக்க பணிகளின் ஊடாக கிழக்கு கடதாசி ஒருங்கிணைப்பு சபை என 1956 இல் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

2015 முதல் 2020 வரையும் மின்சாரம் இல்லாத காரணத்தினால் இத்தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது. 2020 இல் இத்தொழிற்சாலை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மீண்டும் திறக்கப்பட்டது. 50 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மன் பொறியியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இத்தொழிற்சாலையில் உள்ள சிறந்த தொழில்நுட்ப பெறுமானங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி, மீண்டும் உற்பத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய நிலையில் இங்குள்ள உற்பத்தி இயந்திரங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இத்தொழிற்சாலையின் நலனுக்காக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றாரென்பது குறிப்பிடத்தக்கது. இதன் அபிவிருத்திக்காக முன்னர் அவர் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுமுள்ளார்.

நான் இத்தொழிற்சாலையின் தகுதிகாண் அதிகாரியாகக் கடமையாற்றிய காலப்பகுதியில் நிறுவனத்தின் வளங்களைப் பாதுகாத்து உற்பத்திக் கொள்ளளவை அதிகரித்ேதன். நாடு எதிர்கொண்ட சவால்களை வெற்றிகொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதனால் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை அபிவிருத்தி செய்து அதற்குரிய காணியில் சுற்றுலா ஒருங்கிணைந்த அபிவிருத்தி கருத்திட்டத்தை முன்னெடுத்து 2000 தொழில்வாய்ப்புக்களை உருவாக்க முடியும். அதன் மூலம் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முழுமையாக ஒத்துழைப்பு நல்க முடியும் என நம்புகிறேன்.

சரியான நிகழ்ச்சி நிரல் ஊடாக இதனை முன்னெடுக்க முடியும். இந்த அனைத்து விடயங்களையும் புரிந்து செயற்படுவது அவசியம். எவரொருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் அதன் உண்மைத்தன்மையைப் புரிந்து கொள்வது மக்கள் அபிப்பிரராயத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு அறிவுபூர்வமான வழிமுறையாக அமையும். வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை இந்நாட்டின் பொருளாதாதார மேம்பாட்டுக்கு பங்களிக்கும் வகையில் மேம்படுத்துவது அவசியம். நாட்டின் காகித உற்பத்தியின் கேந்திர நிலையமாக அதனை உருவாக்க வேண்டியது அவசியம்.

இதற்கு கடதாசித் தொழிற்சாலை மாத்திரமல்லாமல் இந்த அபிவிருத்தி கருத்திட்டத்தையும் இங்கு முன்னெடுப்பது அவசியம். அதற்காக தொடராக ஒத்துழைப்பது அவசியம்.

தேசமான்ய மங்கள சீ செனரத் முன்னாள் தகுதிகாண் அதிகாரி, வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT