உள்ளாடைக்குள் மறைத்து ரூ. 2 கோடி தங்கம் கடத்தல் | தினகரன்

உள்ளாடைக்குள் மறைத்து ரூ. 2 கோடி தங்கம் கடத்தல்

உள்ளாடைக்குள் மறைத்து ரூ. 2 கோடி தங்கம் கடத்தல்-31 Gold Biscuit Worth Rs. 2 Crore Seized at Airport

சுமார் 3 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (08) காலை, சென்னையிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையம் வந்த விமானத்தில் (6E 1201) பயணம் செய்த ஹட்டனைச் சேர்ந்த 37 வயதான குறித்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்தார்.

உள்ளாடைக்குள் மறைத்து ரூ. 2 கோடி தங்கம் கடத்தல்-31 Gold Biscuit Worth Rs. 2 Crore Seized at Airport

குறித்த நபர், தனது உள்ளாடைக்குள்ளும், சப்பாத்தினுள்ளும் மறைத்து வைத்த நிலையில் சுமார் 100 கிராம் நிறை கொண்ட 31 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்த நிலையில், சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுமார் 3 கிலோ கிராம் (3.191kg) நிறை கொண்ட குறித்த தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி, ரூபா 2 கோடி 8 இலட்சம் (ரூ. 20,800,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளாடைக்குள் மறைத்து ரூ. 2 கோடி தங்கம் கடத்தல்-31 Gold Biscuit Worth Rs. 2 Crore Seized at Airport

சுங்க திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, சந்தேகநபருக்கு ரூபா ஒரு இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளாடைக்குள் மறைத்து ரூ. 2 கோடி தங்கம் கடத்தல்-31 Gold Biscuit Worth Rs. 2 Crore Seized at Airport

Add new comment

Or log in with...