மீண்டும் மலரும் வனப்புமிகு நிம்மதியான நம் தேசம் | தினகரன்


மீண்டும் மலரும் வனப்புமிகு நிம்மதியான நம் தேசம்

5 வருடங்கள் தடைப்பட்டிருந்த அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் மீள ஆரம்பம்

சுத்தம் பேணுவதன் மூலம்  ஆரோக்கியம் மிகுந்த சமூகத்தை கட்டியெழுப்பும் திட்டம்

உலகில் கண்கவர் வனப்புமிக்க ஒரு நாடு என்ற வகையிலேயே ஆதிகாலம் முதல் இலங்கை ஏனையோரின் பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது. இதற்கு எமது நாட்டின் அமைவிடம் மாத்திரமன்றி, ஒரு தேசமாக நாம் பெற்றுள்ள உயரிய பெறுமானங்களும் காரணமாகும்.

எனினும் காலப்போக்கில் இலங்கையரின் தனித்துவ அடையாளத்திற்கு சவாலாக அமையக் கூடிய பல்வேறு பிரச்சினைகளை எமது நாடு எதிர்நோக்க நேர்ந்தது. சுற்றாடலுக்கு கூருணர்வு அற்ற சமூகமொன்று உருவாகி வந்தமையே இதற்கான முதன்மைக் காரணமாக அமைந்தது.

எமது மூதாதையர் இயற்கையுடன் மிக நெருங்கிய பிணைப்பினைக் கொண்டிருந்தனர். அவர்கள் மரம், செடி, கொடிகள், ஆறுகள், நீரோடைகளை மிகவும் நேசித்தனர். அத்தகைய பண்டைய மரபுகள் எம்மை விட்டு நீங்கிச் சென்றமையினால், எம்மீது நம்பிக்கை கொண்டிருந்த இயற்கைக்கு மனிதர்கள் துரோகியானதன் எதிர்விளைவுகளை எமது கண்ணெதிரிலேயே நாம் காணக் கிடைத்தது.

அதிலிருந்து மீண்டு சிறிதளவேனும் நிம்மதியாக சுவாசிக்கக் கூடிய சூழல் 'மஹிந்த சிந்தனை' கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக எமக்கு கிடைக்கப் பெற்றது. இதன் போது நகர அபிவிருத்தி பற்றிய விடயம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு உலகத் தரம் வாய்ந்த நகர திட்டமிடல், சுற்றாடல் முகாமைத்துவம் ஆகியவற்றை நாம் அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவின் நேரடி தலையீடே இதற்குக் காரணமாகும்.

நகரங்கள் துரிதமாக தூய்மைப்படுத்தப்பட்டதுடன், புறநகர் சதுப்பு நிலங்கள் அழகிய நீர்த்தடாகங்களாக மாற்றம் பெற்றன. காடுமண்டிக் கிடந்த புறநகர் பிரதேசங்கள் கண்கவர் பிரதேசங்களாகியதுடன், உடற்பயிற்சிக்கான நடை பாதைகளும் நகர மக்களுக்குக் கிடைக்கப் பெற்றன. இணையத்தின் ஊடாகவும் தொலைக்காட்சியினூடாகவும் நாம் கண்ட பெரும்பாலான வனப்புமிக்க வெளிநாட்டு நகரச் சூழலை எம்மால் நேரடியாகவே இலங்கையில் காண முடிந்தது.

துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்த கொழும்பு நகரம் ஆசியாவில் துரிதமாக அபிவிருத்தியடையும் சுந்தர நகரமாக மாறியது. புறநகர் பிரதேசங்களும் இதனுடன் இணைந்ததாக அழகிய சுற்றுச்சூழலாக மாற்றம் பெற்றன.

நனவாகிக் கொண்டிருந்த இந்தக் கனவு 2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் தடைப்பட்டுப் போனது. வழக்கம் போல அன்று முதல் மீண்டும் எமது நாட்டில் பெருந்தெருக்கள் குப்பைகளால் நிரம்பத் தொடங்கின. அமைச்சர்களின் தேவைக்கமைய வீதி அமைப்புக்கள் மாற்றப்பட்டன, நகரங்கள் அசுத்தமாகின, வெளிநாட்டு குப்பை கூளங்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டன. குப்பைகளைக் கொட்டும் கிடங்காக இலங்கை மாறியது. இச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களால் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பொறுப்புக் கூற வேண்டிய அனைவரும் அமைதியாக்கப்பட்டனர். அவற்றின் பெறுபேறாக வரலாற்றிலேயே மிக மோசமான, கொடிய சுற்றாடல் துன்பியல் நிகழ்வாக குப்பை மேடு சரிந்து விழுந்து பெருமளவு உயிர்களும் உ​ைடமைகளும் காவு கொள்ளப்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனம் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவையனைத்தும் கடந்த கால வரலாற்றுச் சம்பவமாக முற்றுப் பெற்றன. தற்போது நாடு தயாராகி வருகின்றது. நாளுக்கு நாள் ஒவ்வொரு கணமும் நாடு தூய்மையடைந்து வருகின்றது.

அங்குமிங்கும் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றப்படுகின்றன. மீண்டும் சுற்றாடலுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பிணைப்பு உறுதியடைகின்றது. முறையின்றி வெளியேற்றப்பட்ட கழிவுகள் முறைமைப்படுத்தப்படுகின்றன. மக்கள் இயற்கை, சுகாதார பாதுகாப்பு பற்றிய எதிர்பார்ப்புடன் உள்ளனர். அரச அதிகாரிகள், இளைஞர் யுவதிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதியின் சூழல் நேய வேலைத் திட்டத்தில் தன்னார்வத்துடன் இணைந்துள்ளனர்.

இத்தகைய தேசமும் சமூகமுமே எமக்குத் தேவை. தூய்மையான தேசம், சுகாதார, பாதுகாப்பான சுற்றாடல் பற்றிய எமது எதிர்பார்ப்பு தினம் தினம் நிறைவேறி வருகின்றது.

மக்களின் அந்த கனவு யதார்த்தமாகி வருவதையே இப்போது அவதானிக்க முடிகின்றது. இவை எமது நாட்டை மீண்டும் அழகிய வனப்புமிக்க நிம்மதியாக சுவாசிக்கக் கூடிய நாடாக மாற்றும் முயற்சிகளாகும்.

“என்னை நீங்கள் பாதுகாத்தால், நான் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பேன்” என்பதே இதனூடாக சுற்றாடலினால் எமக்கு விடுக்கப்படும் அமைதியான முக்கிய செய்தியாகும்.


Add new comment

Or log in with...