அதிரடியாக விளையாடும் டேவிட் வோர்னருக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன- பிரையன் லாரா | தினகரன்


அதிரடியாக விளையாடும் டேவிட் வோர்னருக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன- பிரையன் லாரா

அடிலெய்ட் டெஸ்டில் 400 ஓட்டங்களை அடிக்க தவறிய வோர்னருக்கு இன்னும் வாய்ப்புள்ளதாக பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

அடிலெய்ட் டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 335 ஓட்டங்கள் அடித்த டேவிட் வோர்னர், லாராவின் 400 ஓட்டங்கள் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் அவுஸ்திரேலியா டிக்ளேர் செய்ததால் வோர்னரால் சாதனைப் படைக்க முடியவில்லை.

இந்நிலையில் அட்டாக் ஆட்டம் ஆடும் டேவிட் வார்னரால் எனது சாதனையை முறியடிக்க மீண்டும் வாய்ப்பு இருக்கிறது என லாரா தெரிவித்துள்ளார்.

பிரையன் லாரா கூறுகையில் ‘‘வோர்னரின் ஆட்டம் மிகச் சிறந்த இன்னிங்ஸ். அவுஸ்திரேலியா வெற்றியைத்தான் மிகப்பெரியதாக நினைத்தது. சீதோஷ்ணநிலை மிகப்பெரிய பங்கு வகித்ததால் அப்படி ஒரு முடிவை எடுத்தது. ஆனால், ஆஸ்திரேலியா டேவிட் வார்னரை 400 ஓட்டங்கள் அடிக்கும் வரை சென்றிருந்தால், நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

நான் இங்கே அதை பார்க்க விரும்பினேன். டேவிட் வோர்னரிடம் 12 ஓவர்கள் எடுத்துக் கொள்ளுங்கள், தேனீர் இடைவேளைக்குள் 400 ஓட்டங்களை கடந்து விட வேண்டும் என்று சொல்லியிருக்கலாம். இது சிறப்பானதாக இருந்திருக்கும்.

2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தானின் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியதை நியாயப்படுத்தாலம். இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் நீண்ட நேரம் முதல் இன்னிங்சை இழுத்தது. ஆகவே, டிக்ளேர் செய்தது அந்த நேரத்தில் சரியானது.

சேர் டொனால்ட் பிரட்மேன் சாதனையை முறியடித்ததும், எனது சாதனையை நோக்கி வோர்னர் விரைவார் என்று விரும்பினேன். வர்ணனையாளர்கள் ஹெய்டன் சாதனையை முறியடிக்கலாம் எனக் கூறினர். ஆனால், 381 ஓட்டங்னைத் தொட்டால், என்னுடைய சாதனையை தொட்டுவிடுவார் என்று நினைத்தேன்’’ என்றார்.


Add new comment

Or log in with...