ஜனாதிபதியின் இந்திய விஜயம்; உறவுக்கு புதிய பலம் | தினகரன்


ஜனாதிபதியின் இந்திய விஜயம்; உறவுக்கு புதிய பலம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இந்திய இலங்கை உறவுகளில் புதிய அத்தியாயமொன்றை திறந்து வைத்துள்ளது என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, இந்தியா இலங்கையின் அண்டை நாடாகும்.

எனவே தமது முதலாவது அதிகாரபூர்வ வெளிநாட்டு விஜயத்துக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவைத் தெரிவு செய்தமை சரியானதொரு முடிவாகும். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்றே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கு விஜயம் செய்துள்ளார். அவ்வாறான விஜயமானது இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை புதிய உயரத்துக்குக்கொண்டு சென்றுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Add new comment

Or log in with...