மனதை உருக்கும் சோகம் | தினகரன்


மனதை உருக்கும் சோகம்

திருகோணமலை -மஹதிவுல்வெவயில் உயிரிழந்த தந்தையின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் மாணவரொருவர் பரீட்சை எழுதச்சென்ற மனதை உருக்கும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ. டீ. சமிந்த லசந்த என்பவர் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது சடலம் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு நேற்றைய தினம் நல்லடக்கம் செய்யப்படவிருந்த நிலையில் அவரது மூத்த மகன் சுபுன் தனஞ்ஜய (16 வயது) சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுகிறார். பரீட்சைக்கு செல்வதற்கு முன்னர் அவரது தந்தையின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.


Add new comment

Or log in with...