ஆட்டோ-பஸ் விபத்து | தினகரன்


ஆட்டோ-பஸ் விபத்து

ஒரே குடும்பத்தில் மூவர் பலி

காலி அம்பலாங்கொடையில் நேற்று மாலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி பஸ் விபத்தில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த தாயும் அவரது இரண்டு மகள்களுமே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் சிறியாவத்தி -தாய்- (55), மதுசானி(28)  மற்றும் மல்சானி(24) என பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர். விபத்தின்போது முச்சக்கர வண்டியில் சாரதியுடன் சேர்த்து ஆறுபேர் பயணம் செய்துள்ளனர். பின் ஆசனத்தில் நான்கு பெண்களுடன் ஒரு குழந்தையும் இருந்ததாக பொலிஸார் கூறினர்.

விபத்தில் காயமடைந்த 42 வயதான பெண்ணும் 02 வயது குழந்தையும் காயங்களுக்கு உள்ளான நிலையில் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தையடுத்து பயணிகள் பஸ்ஸின் சாரதி பஸ்ஸை கைவிட்டு தப்பிச் சென்றிருப்பதானால் பொலிஸார் அவரைதேடி வருகின்றனர்.


Add new comment

Or log in with...