ஒரு வாக்களிப்பு நிலையத்திற்கு இருவர் என 70 பிரதிநிதிகள்! | தினகரன்


ஒரு வாக்களிப்பு நிலையத்திற்கு இருவர் என 70 பிரதிநிதிகள்!

பிரயோக சிக்கலில் தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துதல் நேற்று நண்பகல் 12.00மணியுடன் நிறைவுக்கு வந்தது. 19அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், 3வேறு கட்சிகள் மற்றும் 19 சுயாதீன வேட்பாளர்கள் உள்ளிட்ட 41பேர் இதற்காக கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக 35 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரியா தெரிவித்தார்.

இப்பணிகள் இன்று (07) முற்பகல் 9.00மணிக்கு ஆரம்பமாகி 11.00மணியுடன் நிறைவுக்கு வந்ததோடு, இது தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்காக இன்று (07) முற்பகல் 11.00மணி முதல் 11.30வரையான 30நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

அந்த வகையில் இரண்டு வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்து, தேர்தல்கள் ஆணையாளர், அவை இரண்டும் நிராகரிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சுயேச்சையாக கட்டுப்பணத்தை செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் உள்ளிட்ட 06 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...