அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் | தினகரன்


அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல்

அயோத்தி வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை, பல ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வந்தது.

சமீபத்தில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், 'சர்ச்சைக்குரிய அந்த நிலத்தில், ராமர் கோவில் கட்டலாம். முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட, உத்தர பிரதேச அரசு, அயோத்தி பகுதியிலேயே, 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், அயோத்தி வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, இந்த வழக்கின் மூல மனுதாரர் எம்.சித்திக் என்பவரின் மகனும் ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவருமான மவுலானா சையத் அர்ஷ்ஹத் ரஷிதி மனு தாக்கல் செய்துள்ளார்.


Add new comment

Or log in with...