சபரிமலைக்கு செல்ல வாடகை புல்லட்; தெற்கு ரயில்வே அறிமுகம் | தினகரன்


சபரிமலைக்கு செல்ல வாடகை புல்லட்; தெற்கு ரயில்வே அறிமுகம்

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலையின் பம்பைக்கு செல்ல 'புல்லட்' பைக்குகளை வாடகைக்கு வழங்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

சபரிமலையில் சீசன் துவங்கிவிட்டால், பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதும். இதனால் சிரமத்திற்கு உள்ளாகும் பக்தர்களின் வசதிக்காக பம்பை வரையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 'புல்லட்' பைக்குளை வாடகைக்கு வழங்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. கொச்சியில் பைக்குகளை வாடகைக்கு விடும் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக கடந்த நவ.28ல் செங்கானூர் ரயில் நிலையத்தில் துவங்கப்பட்ட இத்திட்டம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர் ரயில் நிலையங்களில் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வாடகையாக நாள் ஒன்றுக்கு (குறைந்தது 200கி.மீ.,) ரூ.1200 வசூலிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.100 வீதம் கூடுதலாக வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...