Sprite மூடியில் சலுகை: ‘Refresh & Reload’ | தினகரன்


Sprite மூடியில் சலுகை: ‘Refresh & Reload’

Coca-Cola கம்பனியின் இரண்டாவது மிகப் பெரிய குளிர்பான வகை வர்த்தக நாமமான Sprite - ஸ்ப்ரைட் ‘Refresh & Reload’ எனும் சலுகையை பண்டிகைக் காலமான 31 டிசம்பர் 2019 வரை வழங்கவிருக்கிறது. ஸ்ப்ரைட் அருந்துவோர் குடிக்கும் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றிடும் வாய்ப்பு காணப்படுகிறது. கூலான மற்றும் புத்துணர்ச்சியூட்டிடும் லெமன் மற்றும் லைம் சுவைகளைக் கொண்ட ஸ்ப்ரைட் சுவைத்து வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுதும் மேற்கொள்ளப்படும் இந்த நுகர்வோர் விற்பனை விரிவாக்கல் செயற்பாடுகள் மூலம் - UTC (under-the-crown) எனும் மூடிக்கு அடியில் காணப்படும். வெற்றியாளருக்கு ரூ. 4 மில்லியன் பெறுமதியான ரீலோட்களை வென்றிடும் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நாடு முழுதும் நடாத்தப்படும் இந்த சலுகைத்திட்டமானது PET 1.25Lt, 1.5Lt மற்றும் 2Lt ஆகிய எடைகளிலுள்ள Sprite, Coca-Cola, Fanta Orange, Fanta Cream Soda, Portello, Lion Ginger Beer மற்றும் Lion Soda போத்தல்களுக்கு செல்லுபடியாகும். நுகர்வோருக்கு இக்குறிப்பிட்ட எந்த வர்த்தக நாமங்களையும் சுவைத்திட முடியும்.

மஞ்சள் நிற மூடியின் அடியில் தனித்துவமான ஒரு இரகசிய இலக்கம் காணப்படுமாயின், அவ்விலக்கத்தினை 2343 என்ற இலக்கத்துக்கு SMS செய்து ரூ.5/-, ரூ.10/-, ரூ.50/- மற்றும் ரூ.100/-. என்ற பெறுமதிகளில் ரீலோட்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த விரிவாக்கல் சலுகைத் திட்டம் ரூ. 4 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியிலான ரீலோட்களை வென்றிடும் சந்தர்ப்பங்களை வழங்குவதனால் டொப் அப் அல்லது ரீலோட் ஒன்றினை வெற்றிபெறுவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகம் ஆகும்.

நுகர்வோருக்கு நாட்டிலுள்ள எந்தவொரு வலையமைப்பிலிருந்தும் அவர்களது மொபைல் ஃபோனின் மூலம் மேற்கூறப்பட்ட தொகைகளை ரீலோட் செய்து உடனடியாக கழித்துக் கொள்ள முடியும்.


Add new comment

Or log in with...