இரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும் | தினகரன்


இரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்

இரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்-PAK Foreign Minister Makhdoom Shah Mahmood Qureshi Meets President Gotabaya Rajapksa

பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் உறுதியழிப்பு
- போதைப்பொருள், பயங்கரவாதத்தை தடுக்க உதவுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (02) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்ல தமது நாடு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

இலங்கையுடன் நெருங்கிய நட்புறவை பேணிவரும் தமது நாடு, பொருளாதார அபிவிருத்தி, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு பற்றிய விடயங்களில் இலங்கையுடனான தொடர்பினை வலுவாக முன்னெடுத்துச் செல்ல ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்-PAK Foreign Minister Makhdoom Shah Mahmood Qureshi Meets President Gotabaya Rajapksa

தமது நாட்டில் உள்ள பௌத்த பாரம்பரியத்துடன் தொடர்புடைய மரபுரிமைகளை பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்ததுடன், வெகுவிரைவில் தமது நாட்டுக்கு அரசமுறைப் பயணமொன்றினை மேற்கொள்ளுமாறு அவர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார உதவிகளுக்கு அப்பாற்பட்டு இரு நாடுகளும் பரஸ்பர நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டதுடன், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வெற்றிலை ஏற்றுமதியினை இதன்போது நினைவுப்படுத்தினார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல் ஆகியன தற்போது நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அதேவேளை இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் பாகிஸ்தான் தமக்கு உதவியளிக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மொஹமட் பைசல் மற்றும் இலங்கைக்கான பதிற் கடமை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமட் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். 


There is 1 Comment

Pakistan is a good friend HE. Gotabaya Rajapaksa, PM Mahinda Rajapaksa and the Sinhalese Nation of Sri Lanka where the minority communities had lived in "Peace and Harmony", if not for the problems the Minorities created themselves for political greed and selfishness. Sri Lankan majority community will never forget the UNSTINTING SUPPORT Pakistan gave Sri Lanka in the war against the most ruthless terrorist group the LTTE organization and to defeat the so-called Tamil Tigers. The communication between PM Imran Khan and HE. Gotabaya Rajapaksa is much appreciated and welcome by the Muslims of Sri Lanka at this moment of history making in our "Maathruboomiya". HE. Gotabaya Rajapaksa should accept any invitation that maybe extended my PM Imran Khan through Pakistan's Foreign Minister Shah Mehmood Qureshi to make an official vist to Pakistan (Islamabad) at the earliest. Pakistan investments should be encouraged and more trade between the two brotherly nations should prosper as a result of the new friendship extended, while we maintain Equilibrium in international relations with our neighbour India. At the same time, Pakistan should enhance assistance in all areas of defence and counter terrorism expertise and increase more training facilities for are security forces in Pakistan military training facilities with immediate effect. This is also the correct moment for Pakistan to extend all support and assistance to Sri Lanka to get through with the budened debt crisis that the country is facing presently. Pakistan should also offer more educational scholarships to Sri Lankans in educations, especially in the technical trades and designate more Technical experts in the field in agriculture and especially in animal husbandry and "Dairy Farming". Pakistan should come forward to take over and "turn around" the large "Dairy Farms" that the West, Australia and NewZealand has dumped on Sri Lanka under the pretext of assisting to increase milk production, but really sold thousands of cattle (milk cows) that are NOT acclimatized to the weather conditions of Sri Lanka. They have been sold to Sri Lanka at large prices on strict country to country loans and fraudulent deals, one of the causes of Sri Lanka's present debt crisis. This is how the West operate bilaterally to criple the economy of growing nations like Sri Lanka. Pakistan with a track record of having developed the dairy indusrty to become one of the largest diary industrial producers out beating even European countries with having the 3rd., largest cattle breed in the world, should come forward to assist Sri Lanka to follow their foot-steps in the dairy industry. The Sahiwal and the Red Sindhi breeds may suit Sri Lanka the best and Pakistan should try to introduce these breeds to help Sri Lanka's Dairy Industry under new renewed aid assistance programmes. Unlike the production systems in the developed countries, milk production systems in Pakistan represent smallholding with subsistence- or market-oriented-level farming followed by peri-urban or commercial-level farming. This can be an answer to failing Diary Indusrty of Sri Lanka. Pakistan has also to make sure that no undesirable persons enter Sri Lanka, with the assistance of the Sri Lankan security forces and the Immigration authorities and help Sri Lanka to prevent the flow of drugs into Sri Lanka by nefarious characters operating through Pakistan soil. A visit by HE. Gotabaya Rajapaksa to Islamabad in the near future, can pave the way for Pakistan's engagement in Sri Lanka for the betterment of both brotherly Nations. Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".

Add new comment

Or log in with...