3 நாட்களுக்குள் காலி முகத்திடலை அழகுபடுத்துமாறு பணிப்பு | தினகரன்


3 நாட்களுக்குள் காலி முகத்திடலை அழகுபடுத்துமாறு பணிப்பு

3 நாட்களுக்குள் காலி முகத்திடலைஅழகுபடுத்துமாறு பணிப்பு-Beautify Galle Face Green-Johnston Fernando

காலி முகத்திடலை 3 நாட்களுக்குள் அழகுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு, காலி முகத்திடலுக்கு விஜயம் செய்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, அங்கு மக்கள் கூடி, அமர்ந்திருக்கும் பசுந்தரையை அழகுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, வட மேல் மாகாணத்தின் 12ஆவது ஆளுநராக எ.ஜே.எம். முஸம்மில் இன்று (02) புதிதாக  தன்னுடைய கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வின் பொழுது ஊடகவியாளர்களிடம் கருத்த்துத் தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ,

"நாம் அனைத்து இன மக்களின் மனங்களையும் வெற்றிகொள்ளும் அரசாங்கம் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். புதிய ஆளுநராக முஸம்மில் நியமிக்கப்பட்டது மிகவும் நல்ல செயற்பாடாகும். இதனூடாக நாட்டிற்கு மற்றும் சர்வதேசத்திற்கு சரியான செய்தியை வழங்கியுள்ளோம். இல்லையேல் நாம் இனவாதிகள் என்று எமக்கெதிராக பல பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் முஸம்மில் அவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இவை அனைத்தும் போலி பிரச்சாரங்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளன.

நாம் பிரதேசங்கள், மாவட்டங்கள், நாட்டில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். இதுவரை காலமும் வட மேல் மாகாணத்தில் வரலாறு காணத அளவு அபிவிருத்தி செயற்றிட்டங்களை எதிர்வரும் காலத்தில் செயற்படுத்தவுள்ளோம்'

'பிரதேச சபை தேர்தலில் மொட்டு வெற்றி பெற்றதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலிலும் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை ஈட்டிக்கொண்டது. வரலாற்றில் முதன் முறையாக குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை நாம் பெற்றுக்கொண்டோம்.

எனவே பொது தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் மறைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் நாடுமுழுவதும் கொண்டு சென்ற தலைவரான சஜித் பிரேமதாசவை இங்குள்ள மந்திரிகளான நளின் பண்டார  , அசோக்க அபேசிங்க, ஹரின், சுஜிவ ஆகியோர் நாடு முழுவதும் கொண்டு சென்ற தலைவர் இன்று மறைந்துள்ளார். எனவே இவ்வாறன ஒரு சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பெருந்தொகையான வாக்குகள் எமக்கு கிடைக்கும்.

நாம் மீண்டும் குருணாகல் மாவட்டத்தில்  அதிகளவான வாக்குகளை பெற்றுக்கொள்வோம் என நான் முழுமையாக நம்பிக்கை கொள்கின்றேன்.

அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டதாவது,  'இச்செயற்பாட்டின் மூலம் அந்நபர்களின் அறிவு திறனை எம்மால் விளங்கிக்கொள்ளலாம். இவ்வாறான நபர்கள் இந்நாட்டை ஆட்சி செய்ததன் மூலமாகவே நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துள்ளார்கள். எனவே இந்நபர்களின் அறிவு திறனை அவர்கள் தேர்ந்தெடுத்த ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தலின் போதான மற்றும் அதற்கு பின்னரான செயற்பாடுகள் மூலம் விளங்கிக்கொள்ளலாம்...' என்றார் .

'அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து சரியான முடிவினை மேற்கொள்வதாக எம்முடைய ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ச தெளிவாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அவர்களே சரியான முடிவினை மேற்கொள்வார் அமைச்சர் என்ற வகையில் இவ்விடயம் தொடர்பில் நான் கருத்துரைப்பது தவறானதாகும். நாட்டில் தலைவர் ஒருவர் உள்ளார். பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருக்கின்றார். எனவே அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் சரியாக முடிவினை மேற்கொள்வார். தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் அவர் உடனடியாகவே நிறைவேற்றிக் கொண்டுச் செல்கின்றார். எனவே அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பிலும் அவர் சரியான முடிவினை மேற்கொள்வார் என நானும் இந்நாட்டு மக்களும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்....' என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...