Monday, December 2, 2019 - 3:24pm
இலங்கைக்கான கனடா நாட்டின் உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் (Daved Mckinnon) இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
இதன்போது ஜனாதிபதி, உயர் ஸ்தானிகருடன் சுமூகமாக கலந்துரையாடியதுடன், உயர் ஸ்தானிகர் கனடா அரசாங்கத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களை ஜனாதிபதிக்குத் தெரிவித்தார்.
இதேநேரம், சீன மக்கள் குடியரசின் அரச பேரவையின் விசேட பிரதிநிதியும் சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் நாயகமுமான இலங்கைக்கான முன்னாள் சீன தூதுவர் வூ ஜியாங்கோ (Wu Jianghao) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
Add new comment