பாதுகாப்பு வீரர்களுக்கு 100 நாள் விடுமுறை | தினகரன்


பாதுகாப்பு வீரர்களுக்கு 100 நாள் விடுமுறை

எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் விடுமுறை அளிக்க வலியுறுத்துவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியுள்ளார்.

டில்லியில் எல்லை பாதுகாப்பு படையின் 55வது ஆண்டுவிழா நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கலந்து கொண்டார். அப்போது, காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் வீரர்கள் ஜம்முவில் இருந்து டில்லி வருவதற்கு இலவச விமான வசதி, வீரதீர விருதுகளை பெற்ற வீரர்கள் மற்றும் கடமையின்போது வீரமரணம் அடைந்தவர்களின் மனைவியருக்கு டில்லியில் குறைந்த விலையில் வீடுகள் உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

பின்னர் நித்யானந்த் ராய் பேசுகையில், துணை இராணுவத்தினருக்கு உள்ளது போல் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீட்டு தொகை ரூ. 30 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வுபெறும் வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்திருப்பதற்காக ஆண்டுக்கு 100 நாள் விடுமுறை அளிக்க என்னால் இயன்ற அளவு அரசிடம் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


Add new comment

Or log in with...