அரசியல்வாதிகளே மக்களை இன, மத, மொழி ரீதியாக பிரிக்கின்றார்கள் | தினகரன்


அரசியல்வாதிகளே மக்களை இன, மத, மொழி ரீதியாக பிரிக்கின்றார்கள்

மக்களை அரசியல்வாதிகளே இன, மத, மொழி ரீதியாக பிரிக்கின்றார்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.கே. மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இலங்கை உருள் பந்து சம்மேளனப் பொதுச் செயலாளர் பா. தவேந்திரன் தலைமையில் வவுனியா நகரில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட உருள் பந்து சம்மேளனத்தின் அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாடிய போதே இவ்வாறு தொவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று எமது நாடு இன, மத, மொழி, கட்சி ரீதியாக பிரிந்துள்ளது. இவ்வாறு மக்களை பிரிப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளே. அதை தடுத்து நிறுத்தி இலங்கை மக்கள் என்ற அடிப்படையில் நாங்கள் ஒற்றுமையாக வாழக் கூடிய ஒரு நிலையை உருவாக்க வேண்டும். விளையாட்டு நிகழ்வுகளின் மூலம் பல தரப்பட்டவர்களும் பழகுகின்றனர் என்றார்.

வவுனியா விசேட நிருபர்


Add new comment

Or log in with...