சிறந்த ஆடம்பர தொடர்மாடித் திட்டமாக வோட் பிளேஸ் Prime Grand | தினகரன்


சிறந்த ஆடம்பர தொடர்மாடித் திட்டமாக வோட் பிளேஸ் Prime Grand

Prime Group இன், ஆடம்பர முதன்மைத் திட்டமான Prime Grand, அதன் தனிச்சிறப்பு வாய்ந்த செழுமைக்காக, 3ஆவது ஆசிய ஆதன விருது வழங்கும் நிகழ்வில் ‘இலங்கையின் சிறந்த ஆடம்பர தொடர்மாடி அபிவிருத்தி’ என்ற கௌரவம் மிக்க உயரிய விருதினை பெற்றுக்கொண்டது. பாங்கொக்கில் அமைந்துள்ள அதீனி ஹோட்டலில் கடந்த நவம்பர் 22 ஆம் திகதி இடம்பெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் Prime Group இவ் விருதினைப் பெற்றுக் கொண்டது. இந்த நிகழ்வில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் ரியல் எஸ்டேட் சந்தையைச் சேர்ந்த 500 இற்கும் அதிகமான அதிதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இரண்டு நாட்கள் நடைபெற்ற Property Guru Asia Real Estate உச்சிமாநாட்டின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

கொழும்பு 07 இல் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் பிரதேசத்தில் அமைந்துள்ள Prime Grand, இலக்கம் 64, வோட் பிளேஸ், சுற்றுப்புறத்தின் மிகவும் மதிப்புமிக்க சின்னமாக மாறவுள்ளது. இது கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஒரே ஒரு அதி உயர் தொடர்மாடித் திட்டமென்பதுடன், 2021 டிசம்பரில் குடிபுகுவதற்கு ஏற்ற வகையில் துரிதமாக தயாராகி வருகின்றது. தற்போது 31 ஆம் மாடியின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் கட்டுமானம் இந்தத் துறையின் பெரும் நிறுவனமான MAGA Engineering இனால் முன்னெடுக்கப்படுவதுடன், நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு 3 மாதங்களின் முன்னதாகவே கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

‘இலங்கையின் சிறந்த ஆடம்பர தொடர்மாடி அபிவிருத்தி’ என்ற விருதுக்கு மேலதிகமாக, PropertyGuru Asia Property Awards 2019 நிகழ்வில் மேலும் பல விருதுகளை, வெவ்வேறு பிரிவுகளின் கீழ் Prime Group தனதாக்கிக் கொண்டது. Prime Group ஆனது மிகவும் விரும்பப்படும் ‘Best Developer in Sri Lanka’ என்ற விருதை தொடர்ச்சியாக 2 ஆவது ஆண்டாகவும் இம்முறையும் வென்றது.


Add new comment

Or log in with...