Y தொடரில் புதிதாக இணைந்தது Y19 | தினகரன்


Y தொடரில் புதிதாக இணைந்தது Y19

Y தொடரில் புதிதாக இணைந்தது Y19-Vivo Y19 Launch

AI Triple Camera; 5,000mAh Battery

உலகளாவிய ரீதியில் பிரபலமான மொபைல் நிறுவனமான vivo, கடந்த நவம்பர் மாதம் 06 ஆம் திகதி இலங்கையில் தனது இருவருட  வெற்றிகரமான பயணப் பூர்த்தியை கொண்டாடியது. உலகளாவிய மொபைல் ஜாம்பவான் vivo தனது நவீன ஸ்மார்ட்போனான Y19 ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையில் அதன் விரிவாக்கத்தைத் தொடர்கிறது.

இது Y தொடரின் புதிய மாதிரி என்பதுடன் கடந்த நவம்பர் 25ஆம் திகதி இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நவநாகரீக மாதிரியானது 5000 mAh Battery, 18W Dual Engine  துரிதமான மின்னேற்றல் வசதியைக் கொண்டுள்ளதன் மூலம், Battery பாவனை தொடர்பில் கவலைப்பட தேவையில்லை. மேலும் 16MP, 8MP மற்றும் 2MP லென்ஸ்களைக் கொண்ட புரட்சிகர   AI Triple Rear Camera வை Y19 கொண்டுள்ளது. அன்றாட வாழ்வின் சிறிய விவரங்களையும் படம் பிடிப்பதற்கு இது உதவுகிறது.

vivo Y19 Magnetic Black மற்றும் Spring White என இரண்டு நிறத் தெரிவுகளில் கிடைக்கவுள்ளதுடன், இதன் வெளித்தோற்றமானது இயற்கையின் அழகியலை அடிப்படையாகக் கொண்டது. வண்ணங்கள் மாறுவது மற்றும் ஒளி சிற்றலைகள் என ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்க்கும் போதும் மிளிரும் தோற்ற வேறுபாட்டைக் கொண்டது. இதன் 3D அமைப்பின் நுட்பமான வளைவுகள் கவர்ச்சியான தோற்றத்தையும், பிடித்துக்கொள்வதற்கு ஏற்றதாகவும் உள்ளது. 16.58cm (6.53)FHD+ Halo FullView™ திரையானது முடியுமான வரை Bezel ஐ எல்லைக்கே தள்ளியுள்ளதுடன் முன் கமெரா நேர்த்தியான Notch இன் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் 2019 நவம்பர் முதல் இதனை ரூபா 39,990 என்ற விலைக்கு ஒரு வருட நிறுவன உத்தரவாதம் மற்றும் vivo தனது அனைத்து சாதனங்களுக்கும் வழங்கும்  ஆயுட்காலம் முழுவதுமான மென்பொருள் உத்தரவாதத்துடனும் கொள்வனவு செய்ய முடியும்.  vivo Y19 ஐ அதன் தேசிய விநியோகஸ்தரான Abans காட்சியறைகள் மற்றும் நாடுபூராகவும் உள்ள அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர்களிடமிருந்தும் கொள்வனவு செய்ய முடியும்.

vivo இன் புதிய மொபைல் சாதனத்தின் அறிமுகம் தொடர்பில் கருத்து தெரிவித்த vivo Sri Lanka வின் பிரதான நிறைவேற்று அதிகாரி Kevin Jiang, “ vivo Y19 ஸ்மார்ட்போன், Y தொடர் தொடரின் புதிய இணைப்பாகும். இது எங்கள் பாவனையாளர்களுக்கு முழுமையான ஸ்மார்ட் போன் அனுபவத்தை அளிப்பதுடன் நீண்ட Battery சக்தி, வேகமான சார்ஜிங், AI கேமரா, பளபளக்கும் வடிவமைப்பு மற்றும் அல்ட்ரா-கேம் பயன்முறை என பல அம்சங்களில் பாவனையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும். எனவே, விவோ Y19 என்பது எங்கள் மொபைல் தயாரிப்புகளில் புதுமையான தொழில்நுட்பத்தை உள்ளடக்கும் எங்கள் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் மற்றொரு வெளிப்பாடாகும், அத்துடன் பாவனையாளர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கான எங்கள் வாக்குறுதியும் ஆகும்.” என்றார்.

“உலகளாவிய நிறுவனம் என்ற வகையில் vivo இரண்டு வருட காலப்பகுதியில் இலங்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறுகிய காலப்பகுதியில் உள்ளூர் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளதுடன், மொபைல் விற்பனையில் அதிகரித்த போக்கினை எம்மால் காண முடிந்துள்ளது. பாவனையாளர் எதிர்ப்பார்ப்பு மற்றும் பின்னூட்டலுக்கு ஏற்ற தயாரிப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்துவோம்,”என இலங்கையின் vivoவின் இரு வருட பூர்த்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் தெரிவித்தார்.

Y19 4GB RAM மற்றும் 128 GB ROM, மேம்பட்ட பாவனையாளர் அனுபவத்தைத் தருகின்றது.  மொபைல் சாதனத்தின் உயர் மட்ட நினைவக திறனானது, வீடியோக்களைப் பார்வையிட, சமூக ஊடக பயன்பாட்டில் ஈடுபட, தடங்கல் இல்லாத பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்க முடிவதுடன் , Ultra Game Mode மூலம் சிறப்பான கேமிங் அனுபவத்தையும் தருகின்றது. இனி நினைவக வசதி தொடர்பில் கவலையின்றி அனைத்து படங்கள், காணொளிகள் மற்றும் பாடல்களை சேமிக்க முடியும். Batteryயின் செயற்படுகாலம் தொடர்பில் இனி கவலை இல்லை. இது 5000 mAh Battery உடன் இது கிடைப்பதுடன், தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளமையானது இச்சாதனம் நீண்ட நேரம் செயற்பட உதவுகின்றது. 18W இன் சார்ஜிங் தொழில்நுட்பமானது துரிதமாக மின்னேற்றலை மேற்கொள்ள உதவுகின்றது.

முழுமையான காட்சி அனுபவத்தைத் தரக்கூடியமை Y19 மற்றுமொரு சிறப்பம்சமாகும். இச்சாதனமானது 16.58cm (6.53) FHD+ Halo FullView™Display  திரையைக் கொண்டுள்ளது.  இச்சாதனத்தின்  aspect ratio 19.5:9, screen-to-body ratio of 90.3% ஆகும், எனவே பயனர்கள் தமக்கு பிடித்த கேம்ஸ்களை விளையாடும் போதும், வீடியோக்களை பார்வையிடும் போதும் சிறப்பான அனுபவத்தைப் பெற்றிட முடியும்.

vivo பற்றி
vivo உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் என்பதுடன் புதுமையான ஸ்மார்ட் மொபைல்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில் திடமாகவுள்ளது. vivo உலகளவில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சான்றளிக்கப்பட்டுள்ளது. vivo உலகளாவிய ரீதியில் 30 இற்கும் மேற்பட்ட சந்தைகளில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், உலகளவில் 1,000 க்கும் மேற்பட்ட நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் கிடைக்கப் பெறுகின்றது. வன்பொருள் வடிவம் மற்றும் உற்பத்தி முதல், மென்பொருள் உருவாக்கம் (Android based Funtouch OS) வரை, vivo பூரண மற்றும் நிலைபேறான தொழில்நுட்ப சூழலை கட்டமைத்துள்ளது. தற்போது 20,000 இயக்குனர்கள் Dongguan, Shenzhen, Nanjing, Chongqing ஆகிய நான்கு தலமையகங்களின் கீழ் பணியாற்றுகின்றனர். 3,000 பொறியியலாளர்கள் San Diego, Shenzhen, Nanjing, Beijing, Hangzhou, Taipei மற்றும் Silicon Valley ஆகிய 7 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்களில் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனம் Dongguan, Chongqing, Jakarta, New Delhi மற்றும் Bangladesh ஆகிய ஐந்து உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...