களனி கேபல்ஸ் விநியோகத்தர்களை கெளரவிக்கும் வருடாந்த மாநாடு | தினகரன்


களனி கேபல்ஸ் விநியோகத்தர்களை கெளரவிக்கும் வருடாந்த மாநாடு

இலங்கையின் முதல் தர பாதுகாப்பான மின்சார மற்றும் தொடர்பாடல் வயர்கள் உற்பத்தியாளரான களனி கேபல்ஸ், தனது ஆறாவது வருடாந்த விநியோகத்தர் மாநாட்டை அண்மையில் சிலாபம் அனந்தயா ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது.

இந்நிகழ்வில் களனி கேபல்ஸ் பிஎல்சி பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால, சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் அனில் முனசிங்க, பிரதம நிதி அதிகாரி ஹேமமாலா கருணாசேகர, சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் தேவிந்த லொரென்சுஹேவா மற்றும் சகல பிரிவுகளையும் சேர்ந்த முகாமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதிலும் இயங்கும் விநியோகத்தர்கள் மத்தியில் 2018 ஆம் ஆண்டில் சிறப்பாக இயங்கியிருந்த விநியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசுகள் போன்றன வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தது.

நிகழ்வின் போது பாரியளவு, மத்தியளவு மற்றும் சிறியளவு பிரிவுகளில் வெற்றியாளர்கள் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.

பாரியளவு விநியோகத்தர்கள் பிரிவில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்கள் முறையே டபிள்யு ஏ ஜுடித் தேவிகா, ஜி.ஜி. விஜேரட்ன மற்றும் பூர்ண வீரசிங்க ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மத்தியளவு பிரிவில் முதல் மூன்று இடங்களை முறையே டபிள்யு ஆர் விமலதர்ம, எஸ் எல் கிஹான் பிரசாத் மற்றும் ஜே எல் டி சில்வா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சிறியளவு பிரிவில் கே எம் என் எஸ் குலதுங்க, ஜி டி எஸ் சில்வா மற்றும் டி சி கே ஜயகொடி ஆகியோர் கெளரவிப்பை பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட களனி கேபல்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால கருத்துத் தெரிவிக்கையில், வர்த்தக நாமம் ஒன்று சிறந்த தரம் வாய்ந்ததாக இருக்கலாம் என்றார்.


Add new comment

Or log in with...