OPPO ColorOS 7 முதன்முறை சீனாவிற்கு வெளியே வெளியீடு | தினகரன்


OPPO ColorOS 7 முதன்முறை சீனாவிற்கு வெளியே வெளியீடு

OPPO ColorOS 7 முதன்முறை சீனாவிற்கு வெளியே வெளியீடு-OPPO Holds Launch for All-New ColorOS 7 Outside of China for the First Time
OPPO ColorOS இன் சிரேஷ்ட கொள்கை பொறியியலாளர், மனோஜ் குமார் மற்றும் OPPO ColorOS இன் சிரேஷ்ட வியூக முகாமையாளர், மார்ட்டின் லியு

OPPO தனது அனைத்து புதிய கலர்ஓஎஸ் 7 (ColorOS 7) இனது அறிமுகத்தை இன்று இந்தியாவின் புதுடெல்லியில் மேற்கொண்டது. மெருகூட்டப்பட்ட அன்ட்ரொய்ட் அடிப்படையிலான இயங்குதளத்தை (OS) சீனாவுக்கு வெளியே அறிமுகப்படுத்தும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். “மிருதுவான மற்றும் குதூகலமான” “Smooth and Delightful” எனும் புதிய சுலோகத்துடன் ColorOS அறிமுகப்படுத்தப்பட்ட, இந்நிகழ்வில் இன் எல்லையற்ற வடிவமைப்பு எண்ணக்கருவும், தொழில்நுட்ப தீர்வுகளின் தொடரும், புதிய மற்றும் நாடுகளுக்கமைவான அம்சங்களும்; எளிதாக்கப்பட்ட, பயனர் மையப்படுத்திய அனுபவத்தை பெறும் வகையில் அது வெளியிட்டு வைக்கப்பட்டது.

OPPO ColorOS 7 முதன்முறை சீனாவிற்கு வெளியே வெளியீடு-OPPO Holds Launch for All-New ColorOS 7 Outside of China for the First Time

OPPO ColorOS இன் சிரேஷ்ட வியூக முகாமையாளர் மார்ட்டின் லியு தெரிவிக்கையில், "உலகெங்கிலும் உள்ள எமது 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்காக, OPPO தனது ColorOS ஐ வேகமாகவும் மிருதுவானதாகவும் இன்னும் விரிவாக மேம்படுத்தியுள்ளது" என்றார். “இந்த மேம்படுத்தலானது, தொகுதி வடிவமைப்பை மறுவடிவமைப்பது மட்டுமல்லாமல் காட்சி, ஒலி (audiovisual) மற்றும் கேமிங் அனுபவத்தையும் மேம்படுத்தியுள்ளது. இது தவிர, எமது பயனர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப பல உள்ளூர்மயமாக்கப்பட்ட அம்சங்களை நாம் கொண்டு வந்துள்ளோம். அத்துடன் குறித்த உள்ளூர்மயமாக்கல் தொடர்பான வசதிகளை நாம் தொடர்ந்து விரிவுபடுத்தவுள்ளோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

எளிய மற்றும் இலகுரக, எல்லையற்ற வடிவமைப்பு பயனர் அனுபவத்தை புதுப்பிக்கிறது
எல்லையற்ற வடிவமைப்புடன், ColorOS 7 ஆனது, இலகுரக காட்சி அணுகுமுறைக்கு இசைவடைந்துள்ளது. இதன் மூலம் பயனர் இடைமுகம் (UI) எளிதாக்கப்பட்டுள்ளதோடு அது, பயனர்கள் தங்கள் உள்ளடக்கத்தில் அதிக கவனம் செலுத்த வழியமைக்கிறது. பயனருக்கேற்ற முழு ஐகன்  மாற்றியமைத்தல் வசதி, Dark Mode போன்றன, நாள் முழுவதும் வாசிப்பதற்கான சிறந்த அனுபவத்தைத் ஏற்படுத்துகிறது. இது பயனர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படாதிருக்கவும், மின்கலத்தின் நுகர்வை குறைப்பதற்கும் உதவுகிறது.

பென்டாகிராமின் (Pentagram) பங்குதாரரான எடி ஓபரா தெரிவிக்கையில், "புதிய ColorOS 7 ஆனது, OPPO இன் தனியான தரக்குறியீட்டு அடையாளத்தின் நேர்த்தியான தொடர்ச்சியாகும்" என்றார். உலகப் புகழ்பெற்ற வடிவமைப்பு நிறுவனமான பென்டாகிராம், OPPO உடன் அதன் புதிய தரக்குறியீடு மற்றும் காட்சி வெளிப்படுத்தல் அடையாளத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. "ஒலிகள், காட்சிகள் முதல் பயனர் அனுபவம் மற்றும் உணர்வுபூர்வமான ஈடுபாடு வரை, அதன் ஒவ்வொரு அம்சமும் OPPO இன் நுட்பமான, திரவவியல் மற்றும் ஸ்மார்ட் தரக்குறியீட்டுடனான அழகியலை நிரூபிக்கிறது." என அவர் மேலும் தெரிவித்தார்.

OPPO ColorOS 7 முதன்முறை சீனாவிற்கு வெளியே வெளியீடு-OPPO Holds Launch for All-New ColorOS 7 Outside of China for the First Time

மேலும் அதிக பயனர் மையப்படுத்திய இடைத்தொடர்புகள், ஒலி மேம்படுத்தல்
ColorOS 7 ஆனது, உள்ளுணர்வு இடைத்தொடர்புகளை மேலும் அதிகரித்துள்ளது. அதாவது, புதிய வானிலையுடன் ஒத்திசையும் அலாரம் (weather-adaptive alarm) ஆனது, அலார ஒலிகளை வானிலைக்கு அமைவாக தானாகவே மாற்றியமைக்கிறது. புதிய கலைத்துவமான வோல்பேப்பர் அமைப்பிற்கு மேலதிகமாக, பயனர்கள் தற்போது நேரம் அல்லது ஒரு ஸ்வைப் மூலம் மாறிக் கொண்டிருக்கும், தொடரான, துடிப்பு மிக்க வோல்பேப்பர் அனுபவத்தை பெற முடியும். அதேவேளை, மேம்படுத்தப்பட்ட தொடு உணர்வியல் (haptic) வடிவமைப்பானது, தெளிவானதும், மிருதுவான தொடுகை பதிலளிப்பு ஒலிகளையும் மிகவும் யதார்த்தமான தொடுகை அனுபவத்தையும் வழங்க உதவுகிறது. சார்ஜிங், வானிலை மற்றும் செயலிகளை நீக்குதல் போன்ற விடயங்களுக்காக, தெளிவான புதிய அனிமேஷன்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும், ஒட்டுமொத்த ஒலி அமைப்பை மேம்படுத்தும் வகையில் ColorOS ஆனது, டென்மார்க்கின் ஒலி வடிவமைப்பு நிறுவனமான எபிக் சவுண்டுடன் (Epic Sound) கைகோர்த்துள்ளது. இயற்கையினை மையப்படுத்தியதாக, புதிய ஒலி அமைப்புகள் ஆனது, தொகுதி கட்டுப்பாடுகளுக்கு மட்டுமல்லாது, ரிங்டோன்கள், நோடிபிகேஷன்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை கேட்பதற்கான அனுபவத்தை வழங்குகிறது.

முன்னொருபோதும் இல்லாத வேகம், மிருது
அதன் பயனர் இடைமுக முதன்மை (UI-First) கருத்தினால் உந்துதளிக்கப்பட்ட ColorOS ஆனது, பயனர்கள் உணரக்கூடிய மிருதுவான மற்றும் வேகமான அனுபவத்தை உறுதி செய்யும் வகையிலான oFas, oMem, oSense இனை உருவாக்கியுள்ளது. oFas என்பது ஏற்கனவே உள்ளவற்றை மீள திறத்தலின் (cache preload) ஒரு பொறிமுறையாகும். இது குளிர்வான ஆர்ம்பம், வேகமான சூடான ஆரம்பங்களை மேற்கொள்கிறது.

அதாவது தற்போது செயலிகளை திறந்து மிக வேகமாக ஆரம்பிக்கலாம். இதேவேளை, oMem பயனர் பழக்கவழக்கங்களுக்கு இசைவானதாகவும், தேவைகளுக்கேற்பவும் திறன்மிக்க வகையிலும் தொகுதியின் வளங்களை மாற்றுவதோடு, அதனை ஒதுக்க வழியமைக்கிறது. இத்தொழில்நுட்பத்தின் மூலம், RAM பயன்பாடு 40% ஆக அதிகரிக்கப்படுகிறது. பல செயலிகள்  ஒரே நேரத்தில் இயங்கும்போது, தொகுதியின் வெளிப்பாடு 30% ஆக அதிகரிக்கப்படுகிறது.

OPPO ColorOS 7 முதன்முறை சீனாவிற்கு வெளியே வெளியீடு-OPPO Holds Launch for All-New ColorOS 7 Outside of China for the First Time

அத்துடன் oSense ஆனது, முன்-இறுதி (front-end), பயனர் தொடர்பான தொடரீடுகள், முன்னுரிமை அளிக்கும், தொடுகை பதிலளிப்பு மற்றும் பிரேம் வீதங்களை மேம்படுத்துகிறது. இதன் மூலம் கேமிங் மேற்கொள்வது, முன்னரை விட மிருதுவாகிறது. அதி ஆற்றல் கொண்ட போர் போன்ற விளையாட்டுகளை விளையாடும்போது, தொடுகை பதிலளிப்பு 21.6% ஆகவும், பிரேம் வீதம் 38% ஆகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தனியுரிமை பாதுகாப்பபு வலுப்படுத்தல்
தனியுரிமை பாதுகாப்பு (privacy protection) முன்னெப்போதுமில்லாத வகையில் மிக முக்கியமானது என்பதை OPPO அறிந்திருக்கிறது. அத்துடன், பயனர் தரவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கவசங்களானது, மூன்றாம் தரப்பு செயலிகளிலிருந்து பயனர் தகவல்களை பாதுகாக்கிறது. தனிப்பட்ட பாதுகாப்பு பெட்டகம் ஆனது புகைப்படங்கள், வீடியோக்கள், ஓடியோ மற்றும் பிற ஆவணங்களை சேமிப்பக கோப்புறையில் “பாதுகாப்பான வலயத்திற்கு” (secure zone) மாற்றுவதன் மூலம், செயலிகள் அதனை அணுகுவதைத் தடுக்கிறது.

புகைப்படங்கள், வீடியோக்களை மேம்படுத்த புதிய அம்சங்கள்
OPPO எப்போதும் அதன் புகைப்பட திறளுக்காகவே அறியப்படுகிறது. ColorOS 7 இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. AI அழகுபடுத்தல் 2.0 (AI Beautification 2.0) ஆனது சுற்றுச்சூழலை அடையாளம் கண்டு அதற்கேற்ப ஒளியை அளவிடுகிறது. அதன் மூலம் சிறந்த பயனர் தோல் நிற அளவீடு, தெளிவான முக விபரங்களுடன், மிகவும் இயற்கையான மற்றும் வியப்பூட்டும் தோற்றங்களைப் படம் பிடிக்கிறது.

அல்ட்ரா நைட் பயன்முறையானது, விதிவிலக்கான இரவு நேர புகைப்படங்களை வழங்குவதோடு, தெளிவு, பிரகாசம், வண்ணம் ஆகியவற்றின் மூலம் மெழுகுவர்த்தி உடனான இரவு விருந்துகள் மற்றும் இரவு சந்தைகள் போன்ற தருணங்களை பதிவு செய்யும் பொருட்டான இடையீடுகளை (noise) குறைக்கிறது. OPPO இன் ஸ்மார்ட் வீடியோ எடிட்டரான Soloop, வீடியோ படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் ஆகியவற்றை எளிதாக்குகிறது. இதன் மூலம் ஆரம்பநிலை பயனர்களும் அழகான வீடியோக்களை உருவாக்கி அவற்றை ஒரு தட்டலின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

பெற்றுக்கொள்ளும் தன்மை
OPPO இன் தற்போதைய மிகப்பெரிய புதுப்பிப்பான, கலர்ஓஎஸ் 7 Reno, Find, F, K, A series (ரெனோ, ஃபைண்ட், எஃப், கே மற்றும் ஏ தொடர்) உள்ளிட்ட 20 இற்கும் மேற்பட்ட தொலைபேசி மாதிரிகளில், சீனா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா, ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு பிராந்தியங்களில் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 26 முதல், பயனர்கள் இதன் சோதனை பதிப்பை அனுபவிக்க முடியும்.

ColorOS பற்றி
ColorOS என்பது மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட, திறன்மிக்க, நுண்ணறிவு மற்றும் உயர்ரக தோற்றம் கொண்ட OPPO வினது தனிச்சிறப்புமிக்க அன்ட்ரொய்ட் அடிப்படையிலான மொபைல் இயங்குதளமாகும். 300 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களைக் கொண்ட கலர்ஓஎஸ் 7 ஆனது, ஆங்கிலம், ஹிந்தி, தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய உள்ளிட்ட 80 மொழிகளுக்கு ஒத்திசைகிறது.


Add new comment

Or log in with...