போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது | தினகரன்


போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது

போலி நாணயதாள்களை அச்சிட்ட இருவர் குருநாகல் - தம்புள்ள வீதியில் தோரயாய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது 5000ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் 124,  காரொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் போலி நாயணத்தாள்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்திய கணணி இயந்திரம் மற்றும் அச்சு இயந்திரம் போன்ற உபகணரங்கள்  பொலன்னறுவை பெரகும் பிரதேசத்தில் சந்தேக நபர்களுடைய இல்லத்தில் இருந்து குருநாகல் குற்றத் தடுப்பு பிரிவினாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் இருவரும் பொலன்னறுவை பெரகும்உயன கிராமத்தை வதிவிடமாகக் கொண்ட 25 , 26வயதுடைய  திருமணமாகாத இளைஞர்கள் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் இருவரும் பொலன்னறுவையில் இருந்து காரில் வருகை வந்து குருநாகல் தம்புள்ள வீதியில் தோரயாய அமைந்துள்ள கோழி இறைச்சிக் கடையில் ஒரு கிலோ கோழி இறைச்சியை வாங்கி விட்டு போலியான 5000நாணயத் தாள் காசை வியாபாரியிடம் வழங்கியுள்ளனர் கடை உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் அயலவரின் உதவியுடன் பொலிஸாருக்கு விடுத்த தகவலை அடுத்து இரு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமன்த தசநாயகவின் பணிப்புரையின் கீழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பிரகாரம் சஜீவ சமன்த, பொலிஸ் அதிகாரிகளான, சிரிவர்தன, தென்னகோன்,  புத்திக ஆகியோர் இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மாவத்தகம நிருபர்)


Add new comment

Or log in with...