சரித்திர படைப்பாளி ட்டி.டி. ராமகிருஷ்ணன்

இலக்கியவாதிகளின் மன உணர்வுகள் எப்பொழுதும் விசாலமானவை. பதிவுகளில் இருந்து வெளிவருகின்ற அனைத்து விடயங்களினதும் இன்பமானது, அவனது எழுத்துக்களின் வீரியத்திலிருந்தே உருவாகின்றன. இதுவே எழுத்தாளர்கள் கொண்டிருக்கின்ற மாய விம்பமாகும். இவ் விம்பத்திலிருந்து தங்களை விடுவிக்காமல், தங்களது எழுத்துக்களை எப்பொழுதும் மிக நேர்த்தியாக நேசிக்கின்ற, ஒரு படைப்பாளனால் மட்டுமே தரமான இலக்கியங்களைத் தர முடியும்.

அவ்வகையில் மலையகத்தின் கவனயீர்ப்பிற்குரிய மிக முக்கியமான படைப்பாளிதான் ட்டி.டி.ராமகிருஷ்ணன். தற்கால தமிழ் படைப்பிலக்கியத்தின் வாசகக் குழுமம் அனைவராலும் அறியப்பட்ட ஆளுமையாவார்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் குன்னம் குளத்திற்கு அருகிலுள்ள ஏய்யால் கிராமத்தில் பிறந்து, அற்புதமான கதை சொல்லல் மூலமாக எம் மனதினில் நீங்காத இடம் பிடித்தவர்.

புனைவின் மூலதனப் படைப்பாளி. ரயில்வேயின் கண்ட்ரோலராக பணியாற்றும் இவர், 2003ம் ஆண்டு சிறந்த சேவைக்காக ரயில்வே துறையின் தேசிய விருது பெற்றவராவார்.

ஆல்ஃபா, ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா போன்ற நாவல்களை எழுதி, ஷேபா சக்தியின் ஷம் நாவலினை மொழியாக்கமும் செய்துள்ளார்.

இதற்காக பல விருதுகளையும் பெற்ற ட்டி.டி.ராமகிருஷ்ணன் மொழியின் அரசியலினை எழுத்துக்களில் புகுத்திக் கொண்ட லாவகப் படைப்பாளி. 

ஒரு வாசகனுடைய அடையாளம் பற்றி ட்டி.டி.ராமகிருஷ்ணன் குறிப்பிடும் வாக்கு மிக அற்புதமானது.  

எழுதுவதும் வாசிப்பதும் இயல்பான விவாதங்கள் தான் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்.

என் முன்னே நேர்மையான கற்பனைத் தன்மையுள்ள ஒரு வாசகன் உண்டு.

அவன் என் கதையை கேட்பதற்கு ஆர்வத்துடன் அமர்ந்திருக்கும் கூட்டாளி, ஒரு கூட்டுக்காரி, ராபர்ட்டோபொலானோவைப் போல் வாசிப்பை நேசிப்பவன், விமர்சிப்பவன், கேள்வி கேட்பவன் ஆனால் புரிந்து கொள்ளக் கூடியவன். அவனிடம் நான் கதை சொல்வதுதான் என் எழுத்து.

இந்த கதை சொல்லல் வெறும் கதை சொல்லல் இல்லை, காரணம் இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் நாவல் என்பது வெறும் கதை மட்டுமல்ல, கதை சொல்லலின் மூலம் இயல்பான விவாதத்தின் அநேக சாத்தியங்களை ஆராய்வதற்கான தேடல். இதுவே வாசக மனம் கண்டு கொள்ளக் கூடிய பிரதி பற்றிய அரசியல் உரையாடலின் வழி முறையாகும்... 

இவரின் மிகவும் பிரபல்யமான பிரான்ஸிஸ் இட்டிகோரா நாவல் மனோரமா விருது, வைக்கம் முகம்மது பஷீர் விருது, கிருஷ்ணன் குட்டி நினைவு விருது, கோவிலன் விருது, துளுநாடு நாவல் விருது என ஏராளமான விருதினை வென்ற படைப்பாகும். ஒரு படைப்பாளி காலத்தின் விதி அறிந்து தனக்கான பாதையினை செப்பனிட்டுக் கொள்வான். அவனது படைப்புக்களும் காலத்தினை சுவீகரிக்கும் நவீனத்தின் மீது படரக் கூடியவை.

புனைவிலிருந்து மறுதலிக்கக் கூடிய கற்பனை உலகினை மிக நுணுக்கமாக வடித்த படைப்பாளிகள் மலையாள உலகிலே அதிகம் இருக்கின்றனர்.

அதன் வரிசைக் கிரமத்தில் மாயைகளின் விம்பத்தினை நாவல்களின் கதைகளில் ஊடறுத்த ட்டி.டி.ராமகிருஷ்ணன் ஒர் அற்புதமான படைப்பாளியாவார்.  


Add new comment

Or log in with...