PickMe Food அறிமுகப்படுத்தும் “Self PickUp“! | தினகரன்


PickMe Food அறிமுகப்படுத்தும் “Self PickUp“!

விருதுபெற்ற PickMe செயலியின் உணவுப் பிரிவான ‘PickMe Food’ இன் மற்றுமொரு புரட்சிகரமான நடவடிக்கையாக, இலங்கையிர்களின் வாழ்க்கை முறைக்கு அமைய மேலும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதென்ற கம்பயினின் நோக்கத்தை மென்மேலும் பலப்படுத்தும் வகையில் “Self-Pickup” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய அம்சமானது, வாடிக்கையாளர்கள் தமது உணவுக்கான ஓடரை செயலியின் ஊடாக முன்வைப்பதுடன், பரிந்துரைக்கும் பெயருக்கு அமைய தமது ஓடர்களை வாடிக்கையாளர்களே நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கிறது. உணவை வீட்டுக்குச் சென்று விநியோகிப்பது PickMe Food இன் முக்கிய நோக்கமாக இருக்கின்றபோதும், உணவகத்துக்கு மிகவும் அருகிலுள்ள வீடுகள் அல்லது வேலைத்தளங்களிலிருந்து ஓடர்களை வழங்கும் வாடிக்கையாளர்கள் தாம் செல்லும் வழியில் தமது உணவு ஓடர்களைப் பெற்றுக் சொல்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது இந்த அம்சத்தின் நோக்கமாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஓடர்களை வழங்குவதற்கு அல்லது பணத்தைச் செலுத்துவதற்கு வரிசையில் காத்திருப்பதற்காக செலவிடும் நேரத்தை சேமிக்க முடியும்.

புதிய அம்சம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவித்த PickMe Food இன் செயற்பாட்டுத் தலைவர் மேவன் பீரிஸ், “இலங்கையர்களின் நாளாந்தப் பிரச்சினைக்கு PickMe Food மற்றுமொரு புத்தாக்கமான தீர்வை வழங்கியுள்ளது. வேலையிலிருந்து வீட்டுக்குச் செல்லும்போது உணவுக்கான ஓடரை வழங்கி அதனை கையடன் எடுத்துச் செல்வது குறிப்பாக உழைப்பவர்கள் மத்தியில் இரவு உணவு பிரபல்யமாகவுள்ளது. இந்தச் செயற்பாடு இலகுவானதாக, துரிதமானதாக மற்றும் கஷ்டம் அற்றதாக இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். ” என்றார்.

ஒரு நாளில் நேரம் என்பது முக்கியமானதாக இருக்கும் சூழ்நிலையில் ஒரு நபர் நாளாந்தம் எதிர்நோக்கும் சவால்களை எப்பொழுதும் மாற்றியமைப்பதற்கே PickMe முயற்சிக்கிறது. போக்குவரத்துத் துறையில் சம்பியன்களான பின்னர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் ஊடாக PickMe Food ஆனது இலங்கையின் உணவு மற்றும் குடிபானத் துறையில் புரட்சியானதாக அமையும் என கம்பனி நம்புகிறது.


Add new comment

Or log in with...