ஜோன் கீல்ஸின் பிளாஸ்டிக் மீள்சுழற்சி | தினகரன்

ஜோன் கீல்ஸின் பிளாஸ்டிக் மீள்சுழற்சி

ஜோன் கீல்ஸின் பிளாஸ்டிக் மீள்சுழற்சி-John Keels Holdings Plasticcycle

  • “பிளாஸ்டி சைக்கிள்” சிறப்பான இலங்கையை நோக்கிய பயணம்
  • இலங்கையில் வருடாந்தம் 2,550,000 மெட்ரிக் டொன் கழிவுகள்
  • 15% (385,000 மெட்ரிக் டொன்) பிளாஸ்டிக் கழிவுகள்
  • மேல் மாகாணத்தில் 230,000 மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள்
  • நாடு முழுவதும் சுமார் 35% (80,000 மெட்ரிக் டொன்) மீள்சுழற்சி

ஜோன் கீல்ஸ் குழுவின் சமூக தொழில் முயற்சிக் கருத்திட்;டமான “பிளாஸ்டிசைக்கிள்” (Plasticcycle) ஆனது இலங்கையின் பிளாஸ்டிக் மாசடைதலை பெருமளவில் குறைக்கும் ஓர் ஊக்கியாக திகழும் நோக்கை கொண்டுள்ளது.

“பிளாஸ்டிசைக்கிளானது” 2017 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முன்னோடி செயற்திட்டமாக கற்றுக் கொண்டவற்றிலிருந்து மேலும் விரிவாக்கும் நோக்குடன், கொழும்பு 2 (வேகந்த மற்றும் ஹுனுபிட்டிய) வில் அமைந்துள்ள கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான இரண்டு தொகுதிகளில்ஆரம்பிக்கப்பட்டது.

ஜோன் கீல்ஸின் பிளாஸ்டிக் மீள்சுழற்சி-John Keels Holdings Plasticcycle

“பிளாஸ்டிசைக்கிளானது” ஆரம்பகட்டமாக பிளாஸ்டிகிலான போத்தல்கள், கொள்கலன்கள் மற்றும் மூடிகள்;போன்ற மீள் சுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்கு தனியான குப்பை சேகரிக்கும் தொட்டிகளைஅறிமுகம் செய்தது.  இந்த தொட்டிகளுக்கு கிடைக்கப்பெற்ற அனுகூலமான பிரதிபலனின் அடிப்படையில் தற்போது கொழும்பு மற்றும் அதன் சுற்றுச்சூழலிலுள்ள கீல்ஸ் நிலையங்கள், பொது இடங்கள் மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை(வீதி அபிவிருத்தி அதிகார சயையுடன் இணைந்து) போன்ற 130 இடங்களில் இந்த தொட்டிகளை நிறுவி விரிவுபடுத்தியுள்ளது.

ஜோன் கீல்ஸின் பிளாஸ்டிக் மீள்சுழற்சி-John Keels Holdings Plasticcycle

ஓக்டோபர் இறுதியின் போது மேல்மாகாணத்தில் மட்டும் 40 மெட்ரிக் டொன்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது 1,200,000 பெட் (PET)போத்தல்களுக்கு சமமான அளவாகும்.  இலங்கை மீள் சுழற்சியாளர்கள் சங்கம் மற்றும் பி.பி.பி.எல் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி இன் துணை நிறுவனமான ஈகோ-ஸ்பின்டில்ஸ் போன்ற உற்பத்தி செய்யும் கம்பனிகளுடன் இணைந்து செயல்பட்டதில், துப்பரவாக்கும் கருவிகளுக்கான ஒற்றை நாரிழைகள் மற்றும் உலகளாவிய துணி உற்பத்தியாளர்களுக்கான நூல் அடங்களாக பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் பெறுமதி-சேர் உற்பத்திகளை உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்தது.

“பிளாஸ்டிசைக்கிளானது” கொழும்பு மாநகரசபை கழிவு முகாமைத்துவ குழாமில் உள்ளவர்களுக்கு, அவர்கள் சேகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு என்ன நிகழ்கின்றது என்பதனை விளங்கிக்கொள்வதற்கும் அவர்கள் செய்யும் வேலை நாட்டிற்கு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்பதனை தெளிவுபடுத்தவும் பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிலையங்கள் மற்றும் தொம்பே துப்பரவேற்பாட்டு நில நிரப்பல் ஆகிய இடங்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றது. அத்துடன் இளஞ் சந்ததியினருக்கு பிளாஸ்டிக் தடங்கள் மற்றும் பிளாஸ்டிக் மாசடையும் பிரச்சினையை வெல்வதற்கு உலகத்திற்கு உதவி செய்ய அறிவூட்டும் முகமாக பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களும் நடாத்தப்பட்டது.

ஜோன் கீல்ஸின் பிளாஸ்டிக் மீள்சுழற்சி-John Keels Holdings Plasticcycle

இச்செயன்முறையில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தியது, நல்ல பிரதி பலனை அளித்துள்ளது என்பதனை கம்பஹா மாவட்டத்தின் பிரதான பாடசாலைகளில் வைக்கப்பட்ட மீள்சுழற்சி தொட்டிகளிலிருந்து  காணக்கூடியதாக உள்ளது. மிக சமீபத்திய விரிவாக்கமானது, பெருமளவில் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் சுகததாச வெளியக அரங்கிலாகும்;.

மேல் மாகாணத்தை மைய நோக்காகக் கொண்டு, நாட்டில் மீள்சுழற்சி முயற்சிகளுக்கு பங்களிப்புகளை வழங்கும் முகவரான ‘சீரோ ட்ராஷானது’ பிளாஸ்டிக்சைக்கிள் நெருங்கி தொழிற்படும் ஓர் அமைப்பாகும். சீரோ ட்ராஷின் இணை நிறுவனரான ஹசங்க பாதுக்க “வெவ்வேறு வடிவிலான கழிவுகள் எப்போதும் இலங்கைக்கு பிரச்சனையாக அமையும். சேகரிப்பு வழிமுறைகளில் உள்ள இடைவெளியால் பாரிய அளவிலான குப்பைகள் சுற்றுச்சூழலில் குவிந்து வருகின்றன.

இவற்றுக்கான மேலும் நிலையான தீர்வுகளை நோக்கி, முக்கியமாக பிளாஸ்டிக் கழிவுகளை கவனத்திற்கொண்டு கைகோர்த்து முன்செல்வது தனியார் துறையினரின் பொறுப்பாகும்.” என கூறுகின்றார்.  சீரோ ட்ராஷ் போன்ற பங்குதாரர்கள், சேகரிக்கும் செயன்முறைகளை நெறிப்படுத்தி இணைய தளங்கள்உள்ளடங்கிய முயற்சிகளைபயன்படுத்தி வீடுகள், நிறுவனங்கள் மற்றும் மீள்சுழற்சியாளர்களுக்கிடையிலான இடைவெளிகளை நிரப்புகின்றனர்.

‘பிளாஸ்டிசைக்கிளானது’ நிலைபேறான வர்த்தக மாதிரியை உருவாக்கும் நோக்குடன் மீள்சுழற்சிக்கு உட்படுத்த முடியாத பிளாஸ்டிக்கை பயன்படுத்தி பூச்சாடி மற்றும் அலங்கார சிலைகள் போன்ற பெறுமதி சேர் உற்பத்திகளை உற்பத்தி செய்யும் மாதிரி அறை ஒன்றை உருவாக்கவும் பரீட்சிக்கவுமானமுன்னோடி செயற்திட்டத்திற்கு இலங்கை கடற்படையுடன் இணைந்து பங்களிப்பை வழங்கியது.

பிளாஸ்டிசைக்கிளானது 7 வகை பரந்துபட்ட துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட கம்பனிகளை கொண்டுருக்கும்  கொழும்பு பங்குப்பரிமாற்றத்தில் இலங்கையின் பெரியளவிலான நிறுவனமாக பட்டியலிடப்பட்ட ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்க்ஸ் பி.எல்.சி நிறுவனத்தின் சமூக தொழில் முயற்சிக் கருத்திட்டமாகும்.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனமானது 13,000 இற்கு மேற்பட்டோருக்கு நேரடி தொழில் வாய்ப்பினை வழங்குவதுடன் எல்.எம்.டி. (LMD) சஞ்சிகையினால் கடந்த 14 வருடங்களாக இலங்கையின் மிகவும் மரியாதைக்குரிய நிறுவனமாக பெயரிடப்பட்டுள்ளது. உலக பொருளாதார பேரவையின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை ஐ.நா உலக ஒப்பந்தத்தின் அங்கத்துவத்தையும் கொண்டுள்ளதுடன் ஜோன் கீல்ஸ் அமைப்பினூடாக “எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்பும்” நோக்கினை நோக்கி பயணிக்கின்றது.


Add new comment

Or log in with...