குடல் புண் அலட்சியம் செய்வது ஆபத்து! | தினகரன்


குடல் புண் அலட்சியம் செய்வது ஆபத்து!

இரைப்பையில் அமிலம் அதிக அளவில் சுரக்கும் பொழுதும், எச்பைலோரஸ் என்ற கிருமிகளின் தாக்குதல் ஏற்படும் பொழுதும் குடல்புண் உண்டாகின்றது. குடல்புண் பொதுவாக இரைப்பை சிறுகுடல் ஆரம்பப் பகுதியில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதியில் ஏற்படும்.

அமிலம் அதிக அளவில் சுரப்பதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் குறிப்பிடலாம்:

அதிக உறைப்பு வகைகளை உணவில் சேர்ப்பது, நேரம் தவறி உணவு அருந்துதல், மது அருந்துதல்,

புகை பிடிப்பது, மிளகாய் அதிக அளவில் சேர்த்து எண்ணெயில் சமைத்த மாமிசம் உண்ணுதல், அதிக அளவில் கோபம் கொள்வது மற்றும் உணர்ச்சி வசப்படுதல், சில வலி மாத்திரைகளை உட்கொள்ளுதல், கணையத்தில் ஏற்படும் வியாதிகள்.

இரைப்பையில் ஏற்படும் புண்ணை கவனிக்காமல் விட்டு விட்டால் புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.

சிறு குடலில் ஏற்படும் புண்ணுக்கு கீழ்க்கண்டவை காரணங்களாகும்:-

நெருப்புக் காய்ச்சல், காசநோய், பெருங்குடல் புண்ணுக்கு குடல் புழுக்கள் மற்றும் அமீபாவின் தாக்குதல்.

இரைப்பை புண் ஏற்பட்டால் வயிற்றில் வலி ஏற்படும், வயிற்று எரிச்சல் ஏற்படும், சிலருக்கு வாந்தி ஏற்படும். குடல் புண்ணை கவனிக்கவில்லை என்றால் புண் அதிகமாகி இரத்த வாந்தி ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. சில சமயம் கறுப்பாக மலம் கழிப்பார்கள்.

குடல் புண்ணை பரிசோதனை செய்வதற்கு வாயில் குழாய் செலுத்தி புண்ணைப் பற்றி நேரடியாக பார்த்து அறிந்து கொள்ளலாம். அது போலவே ஆசனவாய் வழியாக குழாய் செலுத்தி எந்த வகை புண் இருக்கின்றது என்று அறியலாம்.

மேற்கண்ட நோய் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது நன்று.


Add new comment

Or log in with...